பக்கம்:நலமே நமது பலம்.pdf/231

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


நலமே நமது பலம் 229

பெரியவர்களாக இருந்தால் ஒவ்வொரு மூன்று வினாடிக்கு ஒருமுறை வேகமாகவும், குழந்தையாய் இருந்தால் ஒவ்வொரு இரண்டு அல்லது 3 வினாடிக்கு ஒருமுறை மெதுவாகவும், சிறு குழந்தை என்றால் மிகவும் மெதுவாகவும், இதமாகவும் ஊதிக் காற்றைத் தந்து, சுவாசப் பயிற்சியை ஊக்குவிக்க வேண்டும்.

2.முதுகுப்புறம் அழுத்திவிடும் முறை:

மூழ்கியவரைக் குப்புறப்படுக்க வைத்து அவரது தலைக்கு அருகில் முழங்காலிட்டு நின்று, அவரது தோள் பட்டைகளில் முதுகெலும்புக்கு 2 அங்குலத்திற்கு அருகில் இரண்டு புறமும் இரு கை கட்டை விரல்களையும் வைத்து முன்புறமாக அழுத்தவும்.

அவ்வாறு அழுத்தும்போது, அழுத்துபவர் உடல் எடை, படுத்திருப்பவர் மீது அழுந்த, அதனால் அவரது நுரையீரலுக்கு உள்ளே காற்று உள்ளே புகுந்திட வழி ஏற்படுத்தித் தரும்.

அழுத்துபவர் கவனிக்க: உமது முழங்கைகள் நேராக இருக்க, உடல் எடையுடன் அவரது தோள் பட்டைகளை அழுத்தவும். முன்னும் பின்னும் வேகமாக ஆட்டி அலைக் கழிக்காமல் மெதுவாக அழுத்திக் கொண்டு செல்லவும்.

இவ்வாறு அழுத்திக் கொண்டே பின்புறம் கொண்டு சென்று, மற்ற கை விரல்களை அவரது பக்கவாட்டிற்கு முழங்கைகள் வரை கொண்டு சென்று, உடலைத் தூக்குவது போல அப்படியே அவரது கைகளுடன் உயரே தூக்கிப்பின்னர் மெதுவாக இறக்கி விடவும்.

இந்த அசைப் பால் அவரது மார்புப் பகுதி விரிந்து, காற்றை உள்ளே இழுத்து நிரப்புவதற்கு ஏற்றதாக அமைய