பக்கம்:நலமே நமது பலம்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நலமே நமது பலம் 53

3 வயது முதல் 12 வயதுள்ள குழந்தைகளுக்கே, முழுக்க

முழுக்க இந்த வியாதி வருகிறது என்றாலும், பெரியவர் களையும் விட்டு வைக்காமல் எப்பொழுதாவது தாக்குகிற

சக்தியும் இதற்கு உண்டு.

நோய் கண்டவர்களுடன் நேரடித் தொடர்பு, காற்றில்

உள்ள ஈரத்துளி, பால், ஈக்கள், குழந்தைகளின் விளை யாட்டுப் பொருட்கள் எல்லாம் இந்த நோயைப் பரப்பும் சாதனங்களாகவே இருக்கின்றன.

அறிகுறிகள்:

1.

தொண்டையில் முதலில் வீக்கம் ஏற்படும். தொண்டைப் புண் வருவதும் அதில் உள்ள சுரப்பிகளில் தொந்தரவு ஏற்படுவதும் முதல் அறிகுறியாகும்.

தொண்டையில் போய் இடம் பிடித்துக் கொள்கிற கிருமிகள், வெகுவேகமாக வளர்ந்து பல்கிப் பெருகி, தொண்டையில் கடுமையான தோல் சவ்வை வளர்த்து விடுகின்றன. அதனால் காற்றுக் குழாயின் வழியானது

அடைக்கப்படுகிறது. மூச்சுத் திணறல் ஏற்படுகிறது.

நோயாளியின் உயிருக்கே ஆபத்தை விளைவிக்கிறது.

இதற்கும் மேலாக இந்தக் கிருமிகள் ஒருவகையான விஷத்தை உண்டாக்கி இரத்தத்தில் கலக்குமாறு செய்து விடுகின்றன. இரத்தம் பாதிக்கப்படுகிறபோது நோயாளிக் குழந்தைகளுக்கு இருதய வியாதிகளும், நரம்பு வியாதிகளும் கூட ஏற்பட்டு விடுகின்றன.

தொண்டை, கழுத்துப் பகுதியில் வீக்கம் பரவிக் கொள்கிறபோது, உணவை விழுங்குவதுகூட சில சமயங்களில் கஷடமாகிவிடும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நலமே_நமது_பலம்.pdf/55&oldid=693226" இலிருந்து மீள்விக்கப்பட்டது