பக்கம்:நலமே நமது பலம்.pdf/89

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


நலமே நமது பலம் 87

சக்தியை உடல் எடுத்துக் கொள்ள இயலாத நிலையில் இந்த நோய் ஏற்பட்டு எலும்புகளை மென்மையாக்கி வளைந்து

கொள்ளும்படி செய்து விடுகிறது.

உடல் எடையினைத் தாங்க முடியாத எலும்புகள் வளைந்து கொள்ள கால்கள் வில்லாக வளையவும், முட்டிதட்டிக் கொள்ளவும், கூடுகட்டிக் கொள்கிற மார்புக் கூடும் ஏற்பட்டு, உடலைக் கூனிகுறுக வைத்து விடுகிறது.

பால், வெண்ணெய், முட்டைகள், மீன் எண்ணெய், சூரிய ஒளி இவற்றிலிருந்து ‘டி’ வைட்டமின் நிறைய பெறலாம்.

வைட்டமின் E வைட்டமின் K:

மனித உடலில் இன விருத்திக்கேற்ற வல்லமையை அளிக்கின்றன. ஆண்களுக்கும் பெண்களுக்கும் இச்சத்து குறைகிறபோது மலட்டுத் தன்மை உண்டாகிறது. இதனால் பிள்ளைப்பேறு இல்லாமல் போகிறது. அல்லது பெண்களுக்குத் திரும்பத் திரும்பக் கர்ப்பச் சிதைவு ஏற்படும் நிலை உண்டாகிறது.

வைட்டமின் “இ” யானது பால், வெண்ணெய், பருப்பு வகைகள், பச்சைக் காய்கறிகள், கீரைகள், கறிவகைகள்

இவற்றில் கிடைக்கிறது.

காயம் ஏற்படுகிறபோது உடலில் இருந்து இரத்தம் அதிகமாக வெளியேறிப் போகாமல் இரத்தம் உறைதல் (Clot) ஏற்படும். அப்படி அதிகமாக இரத்தப்போக்கு ஏற்படாமல் இரத்தம் உறைதலை விரைவுபடுத்துகின்ற வேலையை வைட்டமின் K செய்கிறது.

வைட்டமின் ‘கே’ சத்து குறைகிறபோது நீடித்த இரத்தப் போக்கு ஏற்பட்டுக் கொண்டே இருக்கும். இப்படி அடிக்கடி