பக்கம்:நலமே நமது பலம்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

கேரட், தக்காளி முட்டைக்கோஸ் கீரைகள் போன்ற காய்கறிகளிலும் நிறையக் கிடைக்கிறது.

வளரும் குழந்தைகளுக்கு வரப்பிரசாதமாக இது விளங்குகிறது. வியாதிகள் வராமல் தடுக்கிறது. குறிப்பாக இருமலைத் தடுக்கிறது. மாலைக் கண் நோய் வராமல் காக்கிறது. .

‘ஏ’ வைட்டமின் குறைகிறபோது மாலைக்கண்நோய் உண்டாகிறது. சில சமயங்களில் கண்களில் துளை ஏற்பட்டு கண்ணே பாதிக்கப்படுகிற பயங்கர நிலைமையையும்

தோற்றுவிக்கிறது.

பொதுவாக ‘ஏ’ வைட்டமின் குறைகிறபோது அடிக்கடி இருமல் சளி பிடித்தல் போன்றவை ஏற்படுகின்றன. காரணம் உடலானது பலஹlனம் ஆகி விடுவதுதான்.

ஒவ்வொரு நாளும் 3000 முதல் 5000 யூனிட்டுகள் ஒருவருக்குத் தேவைப்படுகின்றன.

வைட்டமின் D

இதுவும் ஏ வைட்டமின் கிடைக்கக்கூடிய காய்கறிகள், மிருக உணவு வகைகளில் கிடைக்கிறது.

நல்ல சூரிய ஒளியில் உடல் நனைகிறபோது, தோலின் மேற்பகுதி வைட்டமின் ‘டி’ யை உற்பத்தி செய்து கொள்கிறது. இதனால்தான் குழந்தைகளை வெயிலில் விளையாடச் செய்கிறோம். *

கால்சியம், பாஸ்பரஸ் போன்ற சக்திகளை 92 .65) L_UL] வைட்டமின் ‘டி’ எலும்புகளை வலுவாக்குகின்றது. பற்களைப் பலப்படுத்துகின்றன.

‘டி’ வைட்டமின் குறைகிறபோது ரிக்கட்ஸ் (Rickets) என்ற நோய் ஏற்படுகிறது. உணவில் இருந்து கால்சியம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நலமே_நமது_பலம்.pdf/88&oldid=694979" இலிருந்து மீள்விக்கப்பட்டது