பக்கம்:நலமே நமது பலம்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நலமே நமது பலம் 85

8. உயிர்காக்கும் வைட்டமின்கள்

கனிமச் சத்துபோலவே விட்டமின்கள் சத்தும் உடலுக்கு உதவுகின்றன. Vits என்ற இலத்தின் சொல்லுக்கு உயிர் என்றே அர்த்தம் என்பதால் இதன் பெருமையை நாம் உணர்ந்து கொள்ளலாம். மொத்தம் 6 வித விட்டமின்கள் உள்ளன.

A, B, C, D, E, K என்பன அவை.

சில விட்டமின்கள் எண்ணெயிலும், சில தண்ணிரிலும், சில கொழுப்பிலும் கரைகின்ற தன்மை கொண்டிருப்பதால் அவை அப்படியே பெயர்களைப் பெற்றுக் கொண்டிருக் கின்றன.

B soli. Lilt 56&retoffflo 56076.15 (Water Soluble); A, D, E, K வைட்டமின் கொழுப்பில் கரைவன (Fat Soluble).

விட்டமின்கள் உடலில் தோன்றும் நோய்களை எதிர்க்கின்றன. தடுக்கின்றன. வராமல் தடுக்க முயல்கின்றன. நோய்கள் வருவது எல்லாம் விட்டமின் சத்தின் குறைவினால்தான்.

உணவை ஜீரணிக்க, நரம்பு மண்டலத்தை உறுதிப் படுத்த, சராசரி வளர்ச்சியை மேம்படுத்த விட்டமின்கள் உதவுகின்றன.

இனி, ஒவ்வொரு விட்டமினின் உண்மைத்

தன்மையைக் காண்போம்.

விட்டமின் A

கொழுப்பில் கரையும் தன்மை கொண்ட வைட்டமின் A

வெண்ணெய், நெய், பால், முட்டை, மிருக ஈரல்கள் மற்றும் மீன்களிலும் (ஏ வைட்டமின்) கிடைக்கிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நலமே_நமது_பலம்.pdf/87&oldid=694977" இலிருந்து மீள்விக்கப்பட்டது