பக்கம்:நலமே நமது பலம்.pdf/86

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


84 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

பள்ளிகளில் காயங்கள் ஏற்படாமல் தடுப்பது, முன்னெச்சரிக்கையான காரியமாக அமைகிறது. மாணவர்கள் தடுக்கி விழாமலும் தடுமாறி விழாமலும் இருக்க, தடைகள் இல்லாதவாறு, கற்கள் முற்கள் இல்லாதவாறு வழுக்கலாக தரை இல்லாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.

முதலுதவிமுறை:

1. மார்புக்கு மேல் அணிந்திருக்கும் ஆடைகள்

இறுக்கமாக இருந்தால், முதலில் தளர்த்தி விடவேண்டும்.

2. நோயாளியை நிமிர்ந்து உட்காரச் செய்து தலையைச்

சற்றுப் பின்புறமாக உயர்த்தி வைத்து, கைகளையும்

தலைக்கு மேலே உயர்த்தி வைத்துக் கொள்ளச் செய்ய வேண்டும். - - -

3. தூய காற்றோட்டம் முகத்தில் படுமாறு உட்கார வைக்க வேண்டும். இந்தச் சமயத்தில் வாய் வழியாக மூச்சிழுக்கச் செய்வதும் உகந்த காரியம். -

4. குளிர்ந்த நீரால் நோயாளியின் முகம் தலை கழுத்துப்

பகுதியைக் கழுவலாம் அல்லது துடைத்துவிடலாம்.

5. தலையைக் குனிந்து முன்பக்கம் பார்க்கச் செய்வதோ

அல்லது மூக்கைச் சிந்த அனுமதிப்பதோ கூடாது.

6. இரத்தம் நிற்காமல் மேலும் வந்து கொண்டிருந்தால், மருத்துவருக்கு ஆளனுப்பி அல்லது மருத்துவமனைக்கு அவரைக் கொண்ட போக வேண்டும். “ - .

-