பக்கம்:நலமே நமது பலம்.pdf/85

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


நலமே நமது பலம் - 83

1.

விபத்துக்குள்ளானவரை முதலுதவி பெற்றாலன்றி, விபத்து நடந்த இடத்தை விட்டு அப்புறப்படுத்த முயலக்கூடாது.

எலும்பு முறிந்த இடத்தில் எலும்பினைச் சரி செய்து அது முன்பிருந்த பழைய நிலைக்கு வர உதவி

செய்யலாம்.

முறிவுற்ற இடத்தின் மேலும் கீழும் சிம்புகளை (Splints) வைத்து பாண்டேஜ் துணியால் கட்டுப் போட

வேண்டும்.

முறிவடைந்த எலும்பை தொட்டில் மாதிரி கட்டித் (String) தொங்கவிட முயலவேண்டும்.

முறிந்த இடத்தில் இரத்தக் கசிவு ஏற்படுகிறபோது முறையாக அதைச் சுத்தம் செய்து கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரவேண்டும்.

விபத்துக்குள்ளானவர் தேகமானது குளிர்ச்சி அடையாமல், வெப்பமான நிலையில் இருக்க வைப்பது நல்லது. மன அதிர்ச்சியையும் மாற்றுகிற முயற்சியில் ஈடுபடுவதும் நல்லது.

இவ்வளவும் நடந்த பிறகுதான் மருத்துவ மனைக்கு, நோயாளியை எடுத்துச் செல்ல வேண்டும்.

7.6. மூக்கில் இரத்தம் கொட்டுதல் (Bleeding from the nose): -

மூக்கில் இரத்தம் சொட்டுவதும் கொட்டுவதும்

காயத்தினால் நிகழலாம். கீழே விழுந்த (அதிர்ச்சியால்) காரணத்தால் ஏற்படலாம். கோடைக் காலக் கொடுமையால் கூட ஏற்படலாம். -