பக்கம்:நலமே நமது பலம்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

10. விபத்துக்களும் முதல் உதவி (p60sd(STBlb (First Aid)

வாழ்க்கையில் நாம் எப்போதும் விரும்புவது நல்லதைத் தான். நல்லது நமக்கு நல்குகின்றதெல்லாம் மகிழ்ச்சி, களிப்பு, பூரிப்பு, இன்பம், பேரின்பம், ஆனந்தம், பேரானந்தம் போன்ற

சுகமான அனுபவங்களைத்தான்.

வேண்டாதது, நாம் விரும்பாதது, வெறுப்பது, நாம் அதன் நிழலைக் கூட நெருட மறுப்பது, நினைத்தாலே துடிப்பது எல்லாம் விபத்து என்பதற்குத்தான்.

நாம் நினைத்து நினைத்து செயல்படுகின்ற செயல்பாடு களுக்கு, நிகழ்ச்சி (Incident) என்று பெயர்.

விபத்து என்றால் எதிர்பார்க்காத ஓர் அதிரடி நிகழ்ச்சி.

விபத்து என்றால் ஏற்கனவே, சிந்தித்துத் திட்டமிடப் பட்டு செயல்களில், நினைத்துப் பார்க்காத ஒரு நொடி நேர பேரடி நிகழ்ச்சி, இதைப் பேரிடி நிகழ்ச்சி என்றும் பேசலாம்.

விபத்து என்றால், முன்கூட்டியே உணர்ந்து கொள்ள முடியாத, ஒரு மாய் மால காரியம். சித்து வேலையாக நடைபெறுகிற ஒரு எத்து வேலை என்றும் கூறுவார்கள்.

நாம் திட்டமிடாத, நாம் குறிப்பிட்டுக் கூற இயலாத நிகழ்ச்சிகள் என்றே, ஆபத்துக்களையும் விபத்துக்களையும் எல்லோருமே விவரிப்பார்கள். -

விபத்து என்றவுடனே, கேட்பவர்களுக்கும், பார்ப்பவர் களுக்கும் கண்ணில் தெரிகிற தோற்றம் இழப்புதான். அழிவுதான், வருத்தம்தான், உபத்திரவம் தான், வியாகூலம் தான். -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நலமே_நமது_பலம்.pdf/94&oldid=694991" இலிருந்து மீள்விக்கப்பட்டது