பக்கம்:நலமே நமது பலம்.pdf/95

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


நலமே நமது பலம் 93

இப்படி ஏற்படுகின்ற இழப்புகளை அழிவான முடிவு என்றும், இடையூறான முடிவு என்றும் பிரித்துப் பார்க்கலாம்.

முடிவான அழிவு என்பது உயிர்ச்சேதமாகும். உடலில் இருந்து உயிர் பிரிந்த பிறகு இறுதிச் சடங்குகள் செய்வதைத் தவிர வேறு என்ன செய்ய முடியும்! நிகழ்ந்ததை ஏற்றுக் கொண்டு நெஞ்சை நிதானப்படுத்திக் கொள்வதைத் தவிர, வேறு வழியேயில்லை. * -

இடையூறான முடிவு என்றால் இடையிலே ஊறு நேர்ந்து, ஏதாவது ஒன்று முறிந்து போன நிகழ்ச்சி என்று கூறலாம். இந்த முடிவில், இழப்பு இருக்கும். இருந்தாலும் இழப்பைச் சரிக்கட்ட முடியும் என்ற நம்பிக்கையும், அதன் தொடர்பாக முயற்சிக்கத் தூண்டும் கடமைகளில் மும்முரமாக ஈடுபட வேண்டும் என்று வேகத்துடன் செயல்பட வேண்டிய சூழ்நிலையும் இருக்கும்.

ஆகவே, துன்பத்திலும், துயரத்திலும், தாங்க முடியாத பொருள் இழப்பிலும், தாக்குப் பிடிக்க முடியாத உடல் இழப்பிலும், உள்ளாக்கி விடும் விபத்துக்களை, அதன் வழிகளை, உங்களுடன் பகிர்ந்து கொள்ளத்தான் இந்தப் பகுதியை உங்களிடம் தந்திருக்கிறேன்.

விபத்தைப் பற்றி எழுத, உங்களுக்கு எப்படி நினைவு வந்தது. துணிவு வந்தது என்ற வினாவை நீங்கள் கேட்கலாம். பதில் பளிச்சென கிடைத்துவிடும் உங்களுக்கு. ஏனென்றால் விபத்து என்ற கடுமையான பாதிப்புக்கு ஆளானவன் என்ற காரணத்தால், விபத்தைப் பற்றி, சுருக்கமாக உங்களிடம் கூறிவிடுகிறேன்.

1986ம் ஆண்டு மார்ச்சு மாதம் நடந்த நிகழ்ச்சி. எனது விளையாட்டுப் புத்தகங்களுக்காக ஆர்டர் பிடிப்பதற்காக, தஞ்சாவூருக்கு என் Standard 20 வேனில் புறப்பட்டேன். என்