பக்கம்:நலம் தரும் நாட்டு மருந்துகள்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

35

காமாலை, சோகை, பாண்டு முதலியவைகள் தீரும். கீழாய்நெல்லிச்சாறு காலையில் மூன்று நாட்கள் உண்டு கடும் பத்தியம் இருந்தாலும் சோகை போம்.

இருமலுக்கு

கண்டங்கத்திரி வேரைக் கற்கண்டு சேர்த்துக் கஷாய மாக்கிக் கால மாலை இருவேளையும் குடிக்கவும்.

நாவு நலத்திற்கு

இலவங்கம், ஏலம், சுக்கு, சாதிப்பத்திரி, வால் மிளகு இவைகளைத் தாம்பூலத்துடன் தரித்துக்கொள்ளவும். இந்திரிய விருத்திக்கும், சீரணத்திற்கும், தேக காந்திக்கும் ஏற்றது.

பேய்ச் சொறிக்கு

இந்துப்பைப் பொடி செய்து நெய்யில் போடடு வெயிலில் வைத்து உடம்பில் பூசி வைத்திருந்து மறுதினம் அரப்பு தேய்த்து நீரில் மூழ்கப் பேய்ச் சொறி தீரும்.

சிங்கிற்கு

நீரடி முத்தும் சந்தனமும் சம அளவாக எடுத்து அரைத்துச் சிரங்கு இருக்கும் இடத்தில் தடவவேண்டும்.

ஆகாசக் கருடன் எனும் வெந்தோன்றிக் கிழங்கும், கெந்தகமும் வகைக்குக் கால் பலம் வீதம் அரைத்துக் கால்படி நல்லெண்ணெயில் போட்டுப் பதமாகக் காய்ச்சி. வடித்து அதைக் காலேயில் சிரங்கின்மேல் பூசி வைத்து விடவேண்டும். மாலையில் இலுப்பை அரப்பும், வேப்பிலை