பக்கம்:நல்லவை ஆற்றுமின்.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புரட்சிக் கவிஞருடன் நான் 105 ஒற்றுமை பற்றிப் பேசினேன். தலைவர் நாயுடு அவர்கள் தமக் கிட்ட மாலையை என் கழுத்தில் இட்டு, வருங்காலத்தில் நீ சிறப்பாய்' என வாழ்த்தினார். மற்றவர் இருவரும் தட்டிக் கொடுத்துப் பாராட்டினர். அன்று முதலே சமூகத் தொண்டி லும் தமிழர் உயர்விலும் கருத்துடன் உழைத்த நான் 1938இல் காஞ்சியில் புரட்சிக் கவிஞர் பாரதிதாசனைச் சந்தித்தேன். 1926 முதல் பள்ளிப்படிப்புடன் சமூகத்தொண்டு ஆற்றிய நிலையில் 1939இல் பெரியார் செங்கற்பட்டில் நடத்திய முதல் சுய மரியாதை மாநாட்டில் முக்கிய தொண்டனாகப் (Volunteer) பணியாற்றினேன், அதே வேளையில் காந்திஅடி களின் உப்புச் சத்தியாகிரகத்தை ஆதரித்து ஊர்வலம் நடத்திய காரணத்தால் நீதிமன்றத் தாழ்வாரத்தில் மாலை வரை சிறையில் இருந்தேன். 1937இல் இராஜாஜி அவர்கள் தலைமையில் அரசு அமைய அவர்கள் இந்தியைப் புகுத்திய போது நான் எதிர்த்தேன். நான் 1926இலிருந்தே பல சமய, அரசியல் கூட்டங்களில் பங்கு கொண்டிருந்தமையின் பெரியார், திரு.வி.க. அண்ணா போன்றோர் தொடர்பு இருந்தது. 1936இல் திரு.வி.க. எங்கள் கிராமத்துக்கே வந்து என்னை வாழ்த்தினார். பெரியார் வீட்டிலேயே பெரியஅன்னையார் கையாலேயே-ஈரோட்டில் உணவருந்தியவன் நான். எனவே இந்தியை எதிர்க்கத் துணிந்ததில் வியப்பில்லை அல்லவா! 1938இல் காஞ்சியில் இந்தி எதிர்ப்பு மாநாடு நடந்தது. நான் அப்போது அங்குள்ள ஆண்டர்சன் பள்ளியில் தமிழா சிரியனாகப் பணியாற்றி வந்தேன். அரசியலில் ஈடுபட்டு, மாவட்டக் கழகத்துக்குப் போட்டியிட்டு வென்றேன். அண்ணா அவர்கள் மாட்டு வண்டியில் வந்து எனக்காக முயன்றார். எனவே அந்த வேளையில் நடந்த இந்தி எதிர்ப்பில் நான் ந-7