பக்கம்:நல்லவை ஆற்றுமின்.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

466 கல்லவை ஆற்றுமின் முக்கிய பங்கு பெற்றேன். அந்த மாநாட்டுக்குப் பலர் வந்திருந்தனர். அதில் புரட்சிக் கவிஞரும் ஒருவர். அப்போது தான் அவர்களை நேரில் கண்டவனாயினும், எனக்கு அவரிடம் பற்றும் பாசமும் உண்டாயிற்று மாநாட்டுக்கிடையில் பிற்பகல் மூன்று மணி அளவில் என் வீட்டிற்கு வருமாறு அழைத்தேன். மாநாட்டின் தொடர்ச்சி மாலை 4 மணிக்குத் தான். எனவே அவர்கள் என்னுடன் என் இல்லம் வந்து, நான் அளித்த சிற்றுண்டியையும் உட்கொண்டு பின் மாநாட் டுக்குச் சென்றார். நானும் உடன் சென்று மாநாடு முடிந்த பின் அனைவரையும் வழியனுப்பிவிட்டு வந்தேன். பின்பு கவிஞர் அவர்களை அடிக்கடி காண வாய்ப்பு இல்லையாயினும் அவர்தம் பாடல்களை விருப்போடு படித்து வருவேன். பின் சென்னையில் பழைய பச்சையப்பர் கல்லூரிக்கு எதிரில் இருந்த பச்சையப்பா பயன்படுத்திய விளையாட்டுத் திடலில் (தற்போது முற்றும் கட்டடங்களாக மாறி விட்டது) அவருக்குப் பாராட்டும் பண முடிப்பும் கொடுத்தபோது நானும் கலந்து இருந்தேன். பெரும் பங்கு கொள்ள வில்லையாயினும் அவரைத் தனிமையில் கண்டு வாழ்த்தி மகிழ்ந்தேன். பின் சில மாநாடுகளிலும் வேறு நிகழ்ச்சிகளிலும் கண்டு மகிழ்ந்தேன். இன்று அவர்தம் பாடல்கள் நாட்டுடைமையாக்கப் பெற்றபோது, தமிழ் நலம் சான்ற அவர் நூல் ஒன்றை நான் என் வள்ளியம்மாள் கல்வி அற வழியில் இயங்கும் தமிழ்க்கலைப் பதிப்பகத்தின் வழியே வெளியிட வேண்டி, தமிழகப் பண்பாட்டுத்துறைச் செய லரிடம் கூறினேன். ஆயினும் இன்றுவரை அவர் முடிவு சொல்லவில்லை. அண்ணாநகரில் உள்ள எங்கள் பள்ளியில் இன்றும் புரட்சிக் கவிஞரின் கொள்ளுப் பேரப் பிள்ளைகள் பயின்று வருவதால் அவர் தம் தொடர்பும் நினைப்பும் எனைவிட்டு நீங்காமல் உள்ளன. அவர்தம் மகள் (கரூரில் பணியாற்றியவர்)