பக்கம்:நல்லவை ஆற்றுமின்.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தாய் மொழி தாயிற் சிறந்ததொரு கோயிலுமில்லை என்று ஒளவை யாரும், பெற்றதாயும் பிறந்த பொன்னாடும் நற்றவ வானினும் நனிசிறந்தனவே என்று பாரதியாரும் தாயே உலகில் அனைத்தினுக்கும் மேம்பட்டவள் என்பதை நன்கு காட்டியுள்ளனர். தன் உதரத்தில் பத்துமாதம் சுமந்து பெற்றதோடு, பிறந்த குழந்தை நலமுற்று வளர, தன் வாழ்வைத் தியாகம் செய்து, தான் குழவிக்காக மருந்துண்டு, தன் பாலூட்டி வளர்த்து ஆளாக்கும் அன்னை உயர்ந்தவள் தானே. இறைவன் கருணையே எண்ணுகின்ற மணிவாசகர் 'பால் நினைந்துாட்டும் தாயினும் சாலப்பரிந்து' எனப் பாடு கின்றார். எனவே உலகில் பிறந்த ஒவ்வொருவரும்ஒவ்வொரு உயிரும் மிக உயர்ந்த நிலையில் வைத்துப் போற்ற வேண்டியவர் தாயாகின்றாள். இந்த நிலையில் மக்கள் வாழ்வை நலமாக்கும்-வளரச் செய்யும் எதையும் தாய்க்குச் சமமாக எண்ணுவது இயல்பாகும். இந்த அடிப்படை அமைதியிலேயே தாய்மொழி தாய்நாடு என்று நம்மொழி யையும் நாட்டையும் போற்றுகிறோம். மொழி மனிதன் பிறரொடு கலந்து வாழக் கருவியாக அமைகின்றது. தான் பிறந்து முதலில் அன்னையோடு பேசுகின்ற மொழியினையே தாய்மொழி என்பர். பிறந்து மொழி பயின்று பின்னெல்லாம் காதல் சிறந்து நின்சேவடியே சேர்ந்தேன், என்பார் காரைக்காலம்மையார். શાil பிறந்ததும், மழலை மொழியில் பேசுவதையே தாய்மொழி என்கின்றோம். இன்றைய உலகில்-பலநாட்டவரும் பல மொழியினரும் மிக அதிகமாக நெருங்கிக் கலந்து பழகும் பான்மையில் ஒருவர் பல்வேறு மொழிகளைக் கற்கினும், ஒவ்வொருவருக்கும் தாய்மொழி என்ற ஒன்றிடம் தனிப் பற்று உண்டு. ஆங்கிலத்தில் வல்லவரான காந்தி அடிகள் தம் வாழ்வு நூலைத் தம் தாய்மொழியாம் 'குஜராத்தியிலே