பக்கம்:நல்லவை ஆற்றுமின்.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தாய்மொழி 111 எழுதினார். உலகப்புகழ் பெற்ற கீதாஞ்சலியைக் கவிஞர்தாகூர் முதலில் தாய்மொழியாகிய வங்க மொழியிலேயே எழுதி sarri, Silver tongue Sastriyar' afsirip gali 5th gyšistaš துக்காக - ஆங்கிலேயராலேயே பாராட்டப் பெற்ற சீனிவாச சாஸ்திரியார் ஒருமுறை நான் எவ்வளவு ஆங்கிலப்புலமை பெற்றுப் பேசினும் முதன்முதல் அவ்வெண்ணங்கள் என் உள்ளத்தில் என் தாய்மொழியாம் தமிழிலேயே அரும்பு கின்றன என்று கூறினார். இவ்வாறு 'நற்றவா உன்ை நான் மறக்கினும் சொல்லும் நா நமச்சிவாயவே' என்ற சுந்தரர் மொழிப்படி, நம்மை மறந்த நிலையிலும், நாம் மாறுபட்ட நிலையிலும் நம் உள்ள அடித்தளத்தில் உருவாகுவதே தாய் மொழி. திராவிட மொழியியல் ஆய்வு செய்து பெருநூல் எழுதிய கால்டுவெல் தம்மை மறந்து ஒரிடத்தில் 'OurMother English என்றே குறிப்பிடுவார். (1956) இன்று உலகில் எத்தனையோ வகையான மொழிகள் உள்ளன. அவற்றைப் பல்வேறு குடும்பங்களாக மொழி நூலார் பிரிப்பர். சில திருந்திய மொழிகள் எழுத்தும் இலக்கியமும் பெற்றுள்ளன; சில திருந்தா மொழிகளாகப் பேச்சளவில் உள்ளன. எப்படி இருப்பினும் அந்தந்த மொழி யினைப் பேசுவோர் அதைத் தம் தாய் மொழி என்றே போற்றுவர். காக்கைக்குத் தன் குஞ்சு பொன் குஞ்சு’ என்பது போல, திருந்தா மொழியினரும், அவற்றைப்பேசும் பழங்குடி மக்களும் பிறரும் அதைப் பொன்னெனப் போற்றி, தாய்க்குரிய வழிபாட்டினைச் செய்வர். தாய் மொழி என்பது பிறந்த நாட்டு மொழி அடிப்படையில் உள்ளத்தால், உதட்டில் முதன் முதல் உருப் பெற்று வருவதாய், வேறு எம் மொழி கற்று அவற்றில் வல்லவரான நிலையிலும், உள்ளத்தில் நீங்காது நிற்பதாய் ஒவ்வொருவராலும் போற்றப் படுவதாகும். தமிழ் நாட்டைப் பொறுத்த வரையில்க்க