பக்கம்:நல்லவை ஆற்றுமின்.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

112 நல்லவை ஆற்றுமின் தமிழரைப் பொறுத்த வரையில் தமிழ் அவர்தம் தாய் மொழி யாகும். உள்ளத்தைத் தொடுவது உணர்வை ஊட்டுவது தாய் மொழியே. குழந்தையுடன் முதன்முதல் அவள் தாயே பழகி அக்குழந்தைக்குப் பேசக் கற்றுக் கொடுக்கிறாள். அது இயல்பாக அவர் தம் தாய் மொழியாகவே இருக்கும். குழந்தையின் மழலை மொழியில் அத்தாய் மொழிச் சொற்கள் கொச்சையாகவும் குறைவற்றதாகவும் அமையினும்கூட, அவற்றைக் கேட்டு ஈன்ற அன்னையின் உள்ளம் மகிழும். தாய் வழியே பின்னர் தந்தை, உற்றார், மற்றாரை உணரும் அந்தக் குழந்தைக்கு இளமையில் தாய் கற்றுத் தந்த அந்தத் தாய் மொழியே தன் மொழியாக அமையும், அதை வளமுறவும் செய்யும். எனவே, அந்த வகையில் மனிதன் என்றும் போற்ற வேண்டுவது தாய் தந்த 'தாய் மொழி'யேயாகும். நாட்டு நலம் உலகம் உழன்று கொண்டே இருக்கிறது. அதில் நாடுகள் பல உயர்கின்றன; பல தாழ்கின்றன. சில செல்வத்தால் செழிக்கின்றன; சில வளமற்று அல்லலுறுகின்றன. இயற்கை நலம் கொழிக்கும் சில நாடுகள் நலிவுறும் அதே வேளையில், இயற்கை வளமில்லாத சில நாடுகள் செழித்தோங்குவதைக் காண்கின்றோம். இவற்றிற்கெல்லாம் காரணம் என்ன? இன்றைய உலகில் இத்தகைய வள நிலை வேறுபாட்டிற்கும் பொருளாதார ஏற்றத்தாழ்வுக்கும் அடிப்படைக் காரணங்களை எண்ணிப்பார்த்து ஆராயும் அறிஞர்கள் எத்தனையோ காரணங்களைச் சுட்டுகின்றனர். அவற்றுள் மிக அடிப்படையான காரணம் அங்கங்கே