பக்கம்:நல்லவை ஆற்றுமின்.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122 கல்லவை ஆற்றுமின் உலகில் வாழும் மக்கள் அனைவரும் வேறுபாடற்று, எல்லாரும் எல்லாச் செல்வமும் பெற்று இயைந்து வாழ வேண்டும் என்பதே சமுதாயக் குறிக்கோளாக அமைகின்றது ஏழை, பணக்காரன் என்ற வேறுபாடுகளோ பிற வேறுபாடு களோ இன்றி ஒத்தவாழ்வு வாழும்'சமதர்மச் சமுதாயத்தைக் காணவே நாட்டுத் தலைவர்கள் பாடுபடுகிறார்கள். இந்த உணர்வு, சமுதாய வாழ்வில் என்றும் மணியிடை இழைபோல் எண்ணப்பட்டு வந்துள்ளது. உண்பது நாழி உடுப்பன இரண்டே, பிறவும் எல்லாம் ஒரொக்குமே என்பது சங்ககால அடிகள். கம்பன் எல்லாரும் எல்லாச் செல்வமும் எய்தலாலே இல்லாரும் இல்லை உடையார்களும் இல்லை என்று பாடினார். ஏறக்குறைய அக்கம்பன் காலத்தை ஒட்டிவாழ்ந்த சேக்கிழார்.இக்கருத்தைத் தம் பெரிய புராணத்தில் பலவிடங் களில் சுட்டிக் காட்டுகிறார். அவற்றுள் ஒன்று தேவாரம் பாடிய சுந்தரர் வாழ்வொடு பற்றியது. 'சமதர்மச் சமுதாயம் அமையச் சட்டங்கள் மட்டும் இயற்றினால் போதாது. மக்கள்-அதிலும் வாழ்நிலையில் மேல்மட்டத்திலுள்ளவர்கள் மனம் திருந்தி எல்லாரும் வாழும் வகையில் செயலாற்ற வேண்டும் என்கிறார் சேக்கிழார். சுந்தரர் தன் தலைவி வாடாமே வாழ, குண்டையூரில் நெல் பெற்று, திருவாரூரின் தெருக்களில், பெருமலை யெனமதிக்கும் பெருவண்டிகளில் கொண்டுவந்து நிறுத்துகிறார். பரவையார் அவை அனைத்தையும் தனதாக்கிக் கொள்ளாது ஊரிலுள் ளாரும் பகிர்ந்து கொள்க’ என முரசறைகின்றார். 'வன்றொண்டர் தமக்களித்த நெற்கண்டு மகிழ்சிறப்பார் இன்றுங்கள் மனைஎல்லைக்குட்படுநெற் குன்றெல்லாம் பொன்றங்கு மாளிகையில் புகப்பெய்து கொள்களன வென்றிமுர சறைவித்தார் மிக்கபுகழ்ப் பரவையார்'