பக்கம்:நல்லவை ஆற்றுமின்.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாட்டு கலம் i23 என்பது சேக்கிழார் வாக்கு. ஆம்! அவ்வாறு பெற்றதை மற்றவர்களுக்கும் பகிர்ந்தளித்து வாழ்வதே வாழ்வின் வெற்றி என்பதையும் அதுவே உலகில் புகழொடு வாழ்வதற்கு ஏற்ற நெறி என்பதையும் சேக்கிழார் விளக்கிக் காட்டுகிறார். பரவையும் சுந்தரரும் அதனால்தான் இன்றளவும் புகழொடு வாழ்கின்றார்கள். இத்தகைய கருத்தினைச் சேக்கிழார் தம் சொந்தக் கருத்தாகமட்டும் எண்ணிப் பயன்படுத்தவில்லை. இவ்வர லாற்றுக்கு மூலகாரணரான சுந்தரர் இத்தகைய சமதர்மச் சமுதாயத்துக்கு வழிகோலியுள்ளார். திருப்புகலூரில் இறைவன் முன் நின்று பாடும் சுந்தரருக்கு உலகவாழ்வின் அடிப்படைத் தேவைகள் உண்பது நாழி உடுப்பன இரண்டே' என்ற உண்மை புலனாகின்றது. தனக்கு அவ்விரண்டு மட்டும் தந்தால் போதும் என இறைவனை வேண்டுகிறார். 'இம்மையே தரும் சோறும் கூறையும் ஏத்தலாம் இடர் கெடலுமாம் என்கிறார். கூறை என்பது ஆடை, உணவு, உடை இரண்டும் அனைவருக்கும் இருப்பின் உலக இடர் கெட்டு நலம் விளையுமே. அதே வேளையில் சுந்தரர் உலகில் பலர் எதை எதையோ வேண்டி, யார்யாரையோ துதிபாடிச் சுற்றி வருவதைக் கண்டு வருந்திக் கண்டிக்கிறார். அந்த நிலை சமுதாய வாழ்வுக்கு ஏற்றதன்று எனவே சுட்டுகிறார், இத்தகைய நல்வாழ்வு அமையச் செல்வர் உள்ளம் திருந்த வேண்டும் என்பது அவர் கருத்து. அதையும் அவர் தன் மேலேயே ஏற்றிக் கூறிக் கொள்ளுகிறார். உள்ளதே அமையும் என்றிருந்தேன்’ என்பது அவர் வாக்கு. செல்வர் தம் தேவைக்குமேல் பலவற்றைச் சேர்த்தும் பதுக்கியும் வைப்பதால் உலகில் உண்டாகும் கொடுமையினை எண்ணிய அவர் உள்ளம் 'உள்ளதே அமையும் என்கின்றது. ஆம்! இந்த எண்ணம் அனைவர் உள்ளத்