பக்கம்:நல்லவை ஆற்றுமின்.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

124 நல்லவை ஆற்றுமின் திலும் உருவானால் எல்லாச் செல்வமும் எல்லாரை யும் சார, தானே வழி உண்டாகுமே! அப்பரடிகளாரும் இந்த உண்மையைத்தான் வைத்த பொருள் நமக்கு ஆம்’ என்று கூறி அமைதிகொள்ள ஆற்றுப்படுத்துகிறார். 'பெற்றபொருள் போதும் என அமைந்து, பேராசை கொள்ளாது, எல்லா வற்றையும் நமதாக்கிக் கொள்ளும் கொடுமையிலிருந்து மனித சமுதாயம் விடுதலை பெற்றால் நாட்டில் சமதர்மம் தானாகவே மலராதா! ஆம்! நாமும் சுந்தரர், அப்பர் போன்ற 'நல்லவர்தம் அடியொற்றி, உள்ளவே போதும் என்ற 'உண்ர்வு திருந்தி, செம்மை வாழ்வில் சிறக்க நின்று, நாட்டிலும் உலகிலும் சமதர்மச் சமுதாயம் வளர வழிகோலுவோமாக! பழங்குடிப் பண்பாடு உயிரினத்தின் உச்சியில் வாழும் மனிதன் தான் எல்லா வகையிலும் முன்னேற்றமடைந்தவனாகவும், தன்னை எண்ணிக் கொள்ளுகிறான். ஆயினும் அந்த மனித இனத்தி லேயே எத்தனை வேறுபாடுகளை பிற உயிர்களிடம் துளியும் காணமுடியாத வேறுபாடுகளைக்-கற்பித்துக் கொண்டு எத்தனையோ மாறுபாட்டுக்கிடையில் அவன் வாழ்வு அமை கின்றது. அதிலும் கற்றவன் என்றும் நாகரிகம் மிக்கவன் என்றும்தன்னைக் கூறிக்கொள்ளும் நகரத்திலும் அதன் சுற்றுப் புறங்களிலும் வாழும் மனிதன் தன்னையே எண்ணி வியந்து கொள்ளுகிறான். அவன் எங்கோ நெடுந் தூரங்களில் காடு மேடுகளிலும் வயல் வரப்புகளிலும் பள்ளத்தாக்கிலும் படுகைகளிலும் எத்தனையோ கல்லா மாக்கள் தம் வாழ்வை அமைத்துக் கொண்டு வாழ்வதை எண்ணிப் பார்ப்பதில்லை. அவர்கள் வாழ்வை எண்ணின் நமக்குப் பல வற்றாத உண்மை