பக்கம்:நல்லவை ஆற்றுமின்.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பழங்குடிப் பண்பாடு 125 கள் நன்கு விளங்கும். நாடோடியாக நாம் எண்ணும் அக் கல்லாக் களிமகனிடம், மனிதனிடம் இருக்க வேண்டிய நாகரிக மனிதன் நழுவவிட்ட எத்தனையோ நல்ல பழக்க வழக்கங்களும் அசைக்கமுடியாத நம்பிக்கைகளும் உள்ளன என்பதை எண்ணிப் பார்ப்பின் அவன் நகரில் வாழும் நாகரிக மிக்காராகத் தம்மை எண்ணித் தருக்குவாரினும் மனிதப் பண்பை நழுவ விடாது காப்பாற்றும் நல்ல ஒளிவிளக்காக விளங்குகிறான் என்பது தெளிவாகும். சில ஆண்டுகளுக்குமுன் கொங்கு நாட்டு மலைவாழ் மக்களை நேரில் சென்று காணும் வாய்ப்பினைப் பெற்றேன். History of Ottagamund, Preface p. vi., vii, ostbudgl?aI(56ir ஒருவராகிய Tras பற்றிச் சுட்டிய Frederick Price என்பார் 'Puzzing Race என்றார். எனக்கும் அவர்களொடு நெருங்கிக் கலந்து பழகியபோது அவர்தம் பழக்கவழக்கங்களும் சடங்கு களும் சிலகொள்கைகளும் என் உள்ளத்தைக் கவர்ந்தன. ஒரு சில பொருளற்றனவாகக் காணப்படினும்,அவற்றுள்ளும் அவர் கள் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டு, அதன் வழியே நல்ல பயன் களைப் பெற்றதாகவும் கூறினர். பலப்பலவாக அமைந்த அவர்தம் நம்பிக்கை, பழக்க வழக்கங்களில் ஒருசிலவற்றையே இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன். அவற்றுள்ளும் பெரும் பாலன எல்லாக் கூட்டத்தினராலும் (tribes) ஒருமுகமாகக் கொள்ளப்பட்டனவாக உள்ளன. மேலும் அவர்கள் பேசும் மொழி அமைப்புகளும் வழங்கும் சொற்களும் அவர்தம் பெயர்களும் பிற சொல் வழக்காறுகளும் கூட அவர்களுடைய பண்பாட்டினை நமக்கு உணர்த்துவனவாக உள்ளன. தெய்வ சம்பந்தமாக அவர்களுடைய நம்பிக்கை அசைக்க முடியாதது. உதகைத் தோதவர் தங்கள் மோட்சவீடு தங்கள் எல்லையின் பக்கத்தில் உள்ள 'முக்குருட்டி மலைக்கு அப்பால் உள்ளது என நம்பி அத்திக்கு நோக்கி வழிபடுகின்றனர். திசை நோக்கித் தொழுகின்ற வழிபாட்டுமுறை வளர்தக்