பக்கம்:நல்லவை ஆற்றுமின்.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கல்வி நலம் கண்ட கற்பகம் 141 தந்தையார்பேரனும் பள்ளிக்காக உடன் நின்று உழைத்த துரைசாமி முதலியார் மகனும் ஆவார்) அண்ணா தணிகை அரசு ஆகியோர் முயற்சியாலும் பிறர்தம் உறுதுணையாலும் பள்ளி பழைய நிலையினைப் பெற்றதோடு, மேநிலைப் பள்ளி யாகவும் உயர்ந்துள்ளது. (தற்போது நடராச முதலியார் அவர்களும் இல்லை). அப்பா அவர்களின் துய உள்ளமும் தொண்டுமே அவர் தொடங்கிய பணியினை உலகில் என்றும் நின்று நிலவும் வகையில் இவர்களை ஊக்கி உணர்வூட்டி வருகின்றன என எண்ணுகிறேன். அடிக்கடி அப்பா இருக்கும் வரை அங்கே சென்று பெரும்பாலும் எல்லா விழாக்களிலும் கலந்து கொண்ட நான், இன்று அவர் இல்லாத வெற்றி டத்தைக் காணமுடியாது தளரும் உள்ளத்தினாலேயே அங்கே செல்வதில்லை. சொந்த ஊருக்குச் சென்றாலும் கூட விடுதிக்குச் செல்லாது வந்துவிடுவேன். எனினும் தொலைவி லிருந்து அதன் வளர்ச்சியினைக் கேட்டுக் கேட்டு மகிழ்கின்றேன். இன்று அவருக்கு நூற்றாண்டு விழா நடைபெறுகின்றது. நான் அறிந்த அந்தப் பள்ளி தொடங்கி எட்டு ஆண்டுகள் கழித்து, 1924 முதல் இன்று வரை அதன் நிலையின்ை எண்ணி நிற்கின்றேன். தன்னலமற்ற, உள்ளத் தூய்மையும் உளத் துறவும் கொண்ட, 'யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற மனப்பாங்கும் உடைய அப்பா வா.தி.மா. அவர்கள் திருப் பெயர் வையம் உள்ளளவும் வாழும் என்பது உறுதி. என்றோ திரு. கல்கி எழுதிய பாலாறும் பகற்கனவும்: போல்ாது என்றும் உலக வாழ்வில் அவர் பள்ளி ஒளி விளக்கமாக ஓங்கி உயரும்-வாழும்-வளரும்-அவரும் வாழ்வார்.