பக்கம்:நல்லவை ஆற்றுமின்.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கனவு கனவாகியது இந்தியா 1947-இல் விடுதலை பெற்றது. அதை அடுத்து நாடு பல வகையில் முன்னேற வேண்டுமென நல்லவர் பலரும் கனவுகள் கண்டனர். அவற்றுள் சில நனவாகியுள்ளன. பல வேறு நிலையில் உள்ளன. இந்த வகையில் அன்று நான் கண்ட ஒரு கனவு நனவாகியதையே இங்கே நான் குறிக் கின்றேன். அனைத்துக் கல்லூரி மாணவர் மன்ற மலருக்குக் கட்டுரை வேண்டும் என்று கேட்டவுடனேயே எனக்கு இந்த நினைவுதான் உண்டாயிற்று. ஆம்! எல்லா மாணவர்களும் சமுதாயத் தொண்டினையே வாழ்வின் குறிக்கோளாகக் கொள்ளவேண்டும். நம் நாட்டில் அறியா நிலையில் வாழும் மக்கள் பலகோடி உள்ளனர். அவர்கள் திருத்தம் பெற்றா லன்றி நாடு முன்னேற முடியாது. ஒருசில ஒரு சிலருக்குத் தான் என்ற நிலைமாறி, எல்லாச் செல்வமும் எய்த' வேண்டிய நிலை உருவானாலன்றி உலகமும் நாடும் சீர்பெற வழியில்லை. அந்த நிலைக்குரிய ஆக்கப் பணியை இன்றைய மாணவர்களே மேற்கொள்ளவேண்டும். பழைமையில் ஊறிய காரணத்தாலும் த்ாம் பெற்ற சில சலுகைகன்ளப்ோ இன்ப வாழ்வின் கூறுகளையோ விட நினைக்கவும் மறுக்கவும் சில பெரியோர்களாலும் தலைவர்களாலும் அத்தகைய சமதர்மச் சமுதாயத்தை உருவாக்க முடியாது. எனவேதான் மாணவர்களை நோக்கி-வருங்கால உலகை உருவாக்கும் நல்லவர்களை நோக்கி இவ்வேண்டுகோளை விடுக்கின்றேன். இந்தியா விடுதல்ை பெற்ற உடன் மக்கள் தொண்டினை அடிப்படையாகக் கொண்ட் கல்விமுறை வேண்டும் என்று கனவு கண்டவன் நான். எனவே அந்த நாளிலே இந்திய முதற் சட்டம்’ என்ற நூலை எழுதி வெளியிட்டேன். உரிமையற்ற இந்தியாவின் குடியரசு இந்தியாவின்-முதற் சட்டமாக அது அமைய வேண்டும் என்பது என் ஆசை. பட்டம் பெறப்