பக்கம்:நல்லவை ஆற்றுமின்.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

146 கல்லவை ஆற்றுமின் ஆண்டு தோறும் கல்விக்கெனப் பல கோடி ரூபாய்கள் செலவழிக்கப் பெறுகின்றது. தமிழ்நாட்டிலும் க்ல்வி வளர்ச்சி அடைந்து வருகிறது. கல்வியில் மேனிலையில் ஒரளவு அமைதி இன்மையும் ஆழ்ந்த படிப்பும் இல்லா நிலையில் அரசியல் சூழல்களும் பிறவும் அமைகின்றன என்றாலும், ஆரம்பக் கல்வி மிகவும் முன்னேற்ற நிலையில் வளர்ந்து வருவது கண்கூடு. அதிலும் இளங்குழந்தைகளின் கல்வியில் பெற்றோர் கருத்திருத்துவது மகிழ்ச்சிக்குரியதாகும். அரசாங்க அடிப்படையில் கல்வி நெறியில் அடிக்கடி பல்வேறு மாற்றங்கள் நடைபெறுகின்றன. மொழி அடிப் படையிலும் பாடங்களின் அடிப்படையிலும் பயிற்சி மொழி அடிப்படையிலும் அமைப்பு முறையின் பிற அடிப்படை களிலும் எத்தனையோ மாற்றங்கள் நாட்டில் நடை பெறுவதைக் காண்கின்றோம். தத்தம் குழந்தைகளை அத்தகைய மாற்றங்களுள் சிக்க வைத்துச் சோதனை செய்து பார்க்க எந்தப் பெற்றோரும் உடன்படார். எனினும் வேறு வழியில்லை என்ற காரணத்தாலே பலர் அந்த மாற்றத்துக் குள்ளான வெள்ளப் போக்காலேயே தள்ளப்பட்டுச் செல்கின்றனர். இதற்கிடையில் பலர் தத்தம் குழந்தை களுக்கு உயர்தரக் கல்வி அளிக்க வேண்டும் என்ற கருத்தால், தம் வாழ்க்கை வசதிகளைக் குறைத்துக் கொண்டாவது பிள்ளைகள் கல்விக்குப் பெருந்தொகையினைச் செலவிட நினைக்கின்றனர்; செலவிடுகின்றனர். அரசாங்கம் கல்வியை இலவசமாக்கியது. ஒரு பக்கத்திலே நலமெனத் தோன்றி னாலும், அதன் மறுபக்கத்திலே அதன் வீழ்ச்சியும் தரக் குறைவும் நமக்குப் புலப்படுகின்றது. அரசாங்க மானியம் பெறும் பள்ளிகளின் ஒவ்வொரு வகுப்பிலும் 60 (அ) 70 வரை மாணவர் சேர்க்கப் பெறுவதால், ஆசிரியர் மாணவர் தொட்ர்பு பொருந்துவதில்லை. எனவே பல பெற்றோர் தம் பிள்ளைகளுக்கெனத் தனியார் பள்ளிகளை நாடுகின்றனர்.