பக்கம்:நல்லவை ஆற்றுமின்.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குழந்தைகள் கல்வி 147 நாட்டின் இந்தச் சூழ்நிலையைச் சிலர் நன்கு புரிந்து தனித்த வகையில் கல்வி நிலையங்களை நிறுவி, நல்ல் முறை யில் அவற்றை நடத்த முயற்சிகளை மேற்கொள்கின்றனர். ஆயினும் ஒருசிலர் இதை ஒரு வாணிபமாகவே கருதித் தரத்தைப் பற்றிக் கவலையுறாது, வெறும் கல்விக் கூடங்களை அமைக்கின்றனர். நாட்டில் ஊர்தொறும் பலப்பல பள்ளிகள் தோன்றுவதைக் கண்டு மகிழ்ச்சி அடையும் அதே வேளையில், அவற்றின் தரத்தைக் கண்டு வேதனை யடைய வேண்டியுள்ளது. வயது மூன்றானவுடன் தம் பிள்ளைகளைப் பள்ளிகளில் சேர்க்கப் பெற்றோர் விரும்பு கின்றனர். அதிலும் ஆங்கில மோகமும் அம்மொழியைக் கற்க வேண்டுமென்ற அவாவும் அதிகமாவதால் ஆங்கிலம் பயிற்சி மொழியாக உள்ள பள்ளிகளை நாடுகின்றனர். இளங் குழந்தைகளின் பிஞ்சு உள்ளங்களில் பதியும் எண்ணங்கள்ே அவர்தம் பிற்கால வாழ்வை உருவாக்குவது உண்மை யாதலால் அந்த இளம் குழந்தைகள் கல்வியையே முதலில் கவனிக்கவேண்டும். மாநில-மத்திய அரசாங்கங்கள் இந்த உண்மையை மறந்து 5; வயது ஆன பின்பே பிள்ளைகளைத் தங்கள் பள்ளிகளில் சேர்த்துக் கொள்ள ஏற்பாடு செய் துள்ளன. ஆயினும் பலர் தனித்த நிலையில் தெருவு தொறும் குழந்தைகள் பள்ளியைத் தோற்றுவித்து நடத்தி வருகின்றனர். ஆனால் பலவற்றின் தரம் விரும்பத்தக்கதாக இல்லை. பயிற்சி பெறாத ஆசிரியர்களை நியமித்தும் இரண்டு மூன்று வகுப்புகளுக்கு ஒர் ஆசிரியரை இருக்க வைத்தும், சிறுசிறு அறைகளில் பல மாணவர்களை அடைத்து வைத்தும் பள்ளிகளை நடத்துவதைக் காண்கிறோம்; இளங் குழந்தைகளுக்குச் சுற்றுச் சூழலை அமைத்து, அவற்றின் மன நிலைக்கு ஏற்ற விளையாட்டுக் கருவிகளைக் கொடுத்து, கல்வியை அவ்விளையாட்டுக்கு இடையில் புகட்ட வேண்டியது கடமையாக இருக்க, பல புள்ளிகள் மாறுபட்ட நிலையில்