பக்கம்:நல்லவை ஆற்றுமின்.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

156 நல்லவை ஆற்றுமின் வகுப்பு வருடங்களில் மாறுதல்-மத்திய மாநிலப் போட்டி களில் தேவையற்ற வேறுபாடு என்று பலவகையில் கல்வித்துறை இடர்ப்படுகிறதேயன்றி உண்மையில் நாட்டுக்கு வேண்டிய கல்விமுறை-அண்ணல் காந்தி, பாரதி போன்றார் நாட்டுக்கு நலம் தரும் என்று சொல்லிய கல்விமுறை இன்றும் நாட்டில் வரவேயில்லை. மாறாக ஆளும் கட்சி எது வரினும் தத்தம் புகழ் பாடும் வகையில் பாடங்களை அமைப்பதிலும் வேற்று நாட்டு மொழிகளுக்கு ஏற்றம் தருவதிலும்தான் கருத்திருத்துகின்றன. பழங்காலத்தில் சில நன்மைகள் பாடத்திட்டத்தில் இருந்தன. மாணவன் இரண்டாம் வகுப்பில் தன் ஊர், அதைச் சுற்றியுள்ள நிலங்கள், மலைகள் வாழ்ந்த-வாழும் "மக்கள்', ஆட்சிநிலை முதலியனவற்றைத் தெரிந்து கொள் வான். அப்படியே மூன்றில் தன் வட்டம், நான்கில் தன் மாவட்டம், ஐந்தில் தன் மாநிலம், ஆறில் தன்னாடு, பிறகு கண்டம், உலகம் என்று போவான். இன்று தமிழ் நாட்டில் படிக்கும் பள்ளி மாணவர்களுக்குப் பாலாறும் வைகையும் தெரியா. அமேசானும் நைலும் தெரியும். பக்கத்து மலை தெரியாது; ஆல்ப் புரியும், தஞ்சையும் பெரிய கோவிலும் புரியா, இலண்டனும் டிராபல்ஸ் சதுக்கமும் புரியும். மற்ற மாநிலங்களும் இதே நிலைதான் போலும். இப்படி இன்று படிக்கும் மாணவர் தம்மைப் பற்றித்-தம் நாட்டைப் பற்றி அறியா வகையில் கல்வி செல்லும்போது நாட்டுப்பற்றும் ஒற்றுமை உணர்வும்:எப்படி உண்டாகும்? படிக்கும் படிப்பிலும் தரம் இல்லை. நேற்று வரை 100க்கு 15 வாங்கினாலும் மேல் வகுப்பிற்குச் செல்லலாம் என்ற நிலை இருந்தது. இன்று சற்று உயர்ந்திருக்கலாம். பத்தாம் வகுப்பு வரை மாணவரை நிறுத்தக் கூடாது. பத்துக்கு மேலும் தேர்விற்குச் செல்ல வடிகட்டும் முறை