பக்கம்:நல்லவை ஆற்றுமின்.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாட்டுக் கல்விமுறை நன்கு அமைவதாக 157 கூடாது என்ற நிலை உள்ளது. பின் எப்படி கல்வியில் உயர்வு காண்பது? கல்லூரிகளிலோ மாணவர் படிக்காமலே மேல் வகுப்பிற்குச் செல்லலாம் என்ற நிலை உள்ளது. கல்லூரிகளும் தன்னாட்சி பெற்று, தத்தமக்கு விருப்பம் போல் மாணவர்களைத் தூக்கிவிடும் நிலை ஏற்பட்டுள்ளது. தேர்வு முறையிலும் சீர் கேடு. முன்பெல்லாம் ஒரு பள்ளி அல்லது கல்லூரியில் பயிலுபவர் வேறு பள்ளி அல்லது கல்லூரியில்தான் தேர்வு எழுத வேண்டும். இன்றோ பயிலும் அதே பள்ளியில்-கல்லூரியில் தேர்வு எழுத லாம். இதனால் சிலர் நேரிய முறையில் இயங்கினாலும் பலவற்றில் சீர்கேடுகள் உள்ளன. தேர்வுக்கு ஒரு மணிக்கு முன் வினாத்தாள்களைப் பிரித்துத் தம் மாணவருக்கு விடை கற்பிக்கும் நிலை, தேர்வு அறையிலே ஆசிரியர்கள் சொல்லிக் கொடுக்கும் நிலை-நூல் வைத்துக் கொண்டே தேர்வு எழுதும் நிலை, காலம் கடந்து விடைத் தாள்கள் பெறும் நிலை, திருத்தும்போது பணம் புழங்கும் காட்சி, இப்படி எத்தனையோ நடக்கின்றன என்று நாட்டில் பலர் பேசு கின்றனர். இந்த நிலையில் கல்வியில் தரத்தின் உயர்வு எங்கே காண முடியும்? வேண்டுமானால் அவற்றுள் பயிலும் மாணவர் முதல் நிலை பெற்றார் என அரசாங்கம் பரிசளிக் கலாம். இந்த முறை மாற வேண்டாமா? பாடங்கள் அமைப்பிலும் குழப்பம். பத்தாம் வகுப் பிற்கோ பிற பள்ளி வகுப்புகளுக்கோ, பன்னிரண்டாம் வகுப்புக்கோ பாடங்களையும் பாட நூல்களையும் அறுதி யிட்டுத் தயாரிக்கும் நல்லவர்'கள் சொல்லிக் கொடுப்பவராக இருப்பதில்லை. எங்கோ உயர் மட்டத்தில் ஆள்பவருக்கு வேண்டியவர்களை அக்குழுக்களில் இடம் பெறச் செய் கின்றனர். அவர்களோ பள்ளிச் சிறுவர்தம் நிலை-தரம் அறிந்து பாடங்களை அமைப்பதில்லை; ஏதோ தன் மனம் போன போக்கில் எப்படியோ தம் தரம், தகுதிக்கு ஏற்புத்