பக்கம்:நல்லவை ஆற்றுமின்.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

160 கல்லவை ஆற்றுமின் அமைத்து, அதில் தேர்ச்சி பெறுவோரையே ஆணைக்குழு அப் பணிகளுக்குத் தேர்ந்தெடுக்க வேண்டும். மற்றவர்கள் எவ்வளவு உயர்பட்டம் பெற்றவராயினும் அவர்களை அரசாங்க ஊழியர்களாக நியமிக்கக் கூடாது. இந்த முறை வருமானால் தேவையற்ற கல்லூரிப் படிப்புக்கு அரசாங்கம் கோடி கோடியாகச் செலவு செய்ய வேண்டியதில்லை. அரசாங்கத்துக்கும் தன் தேவைக்குரிய தகுதி பெற்றவர் இடம் பெற வாய்ப்பு உண்டு. சோடிக்கணக்கில் கல்லூரிக் கல்விக்குச் செலவு செய்து அவர்களைப் பிறகு பத்தாம் வகுப்பு மாணவரோடு போட்டி இட அனுப்புவதில் எப்படி நியாயம் பிறக்கும்? பல சலுகைகள் கிடைப்பதால்-பலருக்கு இலவசக்கல்வி இருப்பதால் பொழுது போக்குக்காகப் படிப்பதற்காகச் சொல்லிச் சுற்றித் திரிபவரும் உளர். இருபது ஆண்டுகளுக்கு முன் நான் ஒரு துணை வேந்த ரோடு பேசிக்கொண்டு இருந்தேன். அப்போது ஒன்றும் அறியா கிராமவாசி ஒருவர் அவர்கள் காலில் நெடுங்கடையாக வீழ்ந்தான். அவர் என்னவென்று கேட்ட போது, தன் மகன் பி. ஏ. தேறிவிட்டதாகவும் அதற்கு மேல் ஏதோ இரு ஆண்டு படிப்பு இருப்பதாகவும் அதில் அவனுக்கு இடம் வேண்டும் என்றும் கேட்டான். என்ன படிப்பு என்பது கூட அவனுக்குத் தெரியாது. துணை வேந்தர் அதற்கு என்ன அவசியம், ஏதேனும் வேலைக்கு முயலலாமே என்றார். அவன் ஐயா கல்லூரியில் சேர்ந்தால் இலவச உணவு விடுதியில் இரண்டு ஆண்டுகள் நிம்மதியாக நல்ல சாப்பாடு கிடைக்குமே! அதற்காகத்தான்’ என்றான். கல்வி இந்த வகையில் சீரழிக்கப் பெறுகின்றது. அரசாங்கம் திட்டமாகத் தம்பணிக்கு வேண்டிய கல்வி முறையினைப் பிரித்து, அதில் தேர்ச்சி பெறுவோரே அரசாங்கப் பணிக்குத் தேர்ந்தெடுக்கப்பெறுவர் என்று விதி அமைத்தால் இந்த அவலநிலை உண்டாகாதே! அப்படியே ಢಿ(D பதவிகளுக்கும் அங்கங்கே அவ்வத் துறைகளில் தேர்வு