பக்கம்:நல்லவை ஆற்றுமின்.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாட்டுக் கல்விமுறை நன்கு அமைவதாக 161 வைத்து சிறக்க உள்ளவர்களையே தெளிந்து தேர்ந்தெடுக்க வேண்டும். ஒரு வேளை ஐ. ஏ. எஸ் போன்ற பதவிகளுக்கு நேரடித் தேர்வு எழுத உயர்பட்டதாரிகளை அனுமதிக்கலாம். இந்த முறை கல்வித்துறையில் வரவேண்டும். கல்வித்துறை தொழில் மயமாக வேண்டும் என்ற கொள்கை அரசாங்கத்தால் ஏற்றுக்கொள்ளப் பெற்ற ஒன்றாகும். ஆயினும் பல ஆண்டுகளுக்கு முன் காலஞ் சென்ற மூதறிஞர் இராஜாஜி தமிழ் நாட்டில் கொண்ட சாதி அடிப் படையில் அமைந்த தொழில் முறை நாட்டுக்கு உதவாதது; மாறுபட்டது. எனவேதான் பலத்த எதிர்ப்புகளுக்கிடையே அது கைவிடப் பெற்றது. அந்தந்தச் சாதி மாணவன் அவனவனுக்குரிய தொழிலைத்தான் கற்க வேண்டும் என்ற அந்த முறை நாட்டுக்கு ஏற்ற ஒன்றாகாது. உலகில் வளர்ந்து வரும் பல்வேறு தொழில் வகைகளில் பத்தாம் வகுப்பில் தேறிய மாணவாகள் பயிற்றப்பெற வேண்டும். இன்று தமிழகத்தில் பதினொன்று பன்னிரண்டு ஆகிய வகுப்புகளில் அத்தகையமுறை எழுத்தர்களை உருவாக்கும் ஒருநிலையில் upo Gib (Vocational Course) o draig. 44%ful Luo இருந்து ஏனோ எடுக்கப் பெற்றது. அதில் பயில்பவர்களுள் பெரும்பாலோர் தகுதிபெற்றிருந்தும், பல உயர்கல்வி பெற்றோர் போட்டிக்கிடையில் எழுத்தர் பதவியின் தேர்வு எழுதாது, பட்டக் கல்வி பெறவே முயல்கிறார்கள். ஆயினும், பல்கலைக்கழகங்கள் நூறு இடங்களில் 10 இடங்களே இவர் களுக்கு ஒதுக்க வேண்டும் என்ற ஆணை இடப்பெற்று உள்ள மையின் அவர்கள் வாழ்வு மங்குகின்றது. வளர்ச்சிக்கு வழி இல்லை, எனவே நான் மேலே காட்டியபடி இந்தவகைப் பயிற்சி பெறுபவர்கள் மட்டும். அரசாங்க எழுத்தர் தேர்வு எழுத வேண்டும் என்ற முடிவு கொண்டால் அவர்கள் வாழ்வு சிறக்கும். உயர்கல்வியில் தேவையற்ற கூட்டமும் குறையும். அனைத்திந்திய புதிய கல்விக் கொள்கையினை ஆராயும் குழு