பக்கம்:நல்லவை ஆற்றுமின்.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாட்டுக் கல்விமுறை நன்கு அமைவதாக 163 திட்டங்கள் உள்ளன. ஆனால் தமிழ்நாடு செய்த பாவம் தமிழ்நாட்டில் தமிழ் பயிலாது எத்தனைப் பட்டங்களையும் பெற வாய்ப்புள்ளது. நாடு முழுவதும் இன்று உத்தரப் பிரதேச மாநில முதல்வர் கூறியபடி அந்த மாநில மொழி கட்டாயமாக்கப் பெற வேண்டும். இன்றேல் அண்ணல் காந்தி அடிகள் மொழிவாரி மாநிலத்தை வற்புறுத்தியதின் பயன் யாதோ? தமிழ்நாட்டில் பல ஆண்டுகளுக்கு முன் டாக்டர் அவினாசிலிங்கம் செட்டியார் கல்வி அமைச்சராக இருந்த போது அதைச் செயல்படுத்தினார். அப்போது பாடநூல் எழுதக் கூடாது என்ற கொள்கையோடு இருந்த நான், தமிழுக்காக அந்தக் கொள்கையினையும் விட்டு-யாரும் முன்வராத நிலையில்-அமைச்சர் வேண்டுகோளின்படி-6, 7, 8ஆம் வகுப்புகளுக்குப் பாட நூல்கள் எழுதினேன். வேறு பதிப்பகங்கள் முன் வராத நிலையில் அன்று ஆங்கிலேயர் ஆணையின் கீழ் இருந்த மாக்மில்லன்” வெளியீட்டாளர்களே அந்த நூல்களை வெளியிட்டு உதவினர். பின் பல பதிப்பகத் தார் முன்வந்தார்கள் என்பதும் உண்மை. அதன் வழியில் தமிழ்நாட்டில் தமிழ் பயிலாது எட்டாம் வகுப்பினைத் தாண்ட முடியாது. ஆனால் பின் வந்த அரசுகள் அனைத்தும்-அந்தக் காங்கிரஸ் அரசு உள்பட-அக்கொள் கையினை மண்மூடச் செய்தன. இன்றும் அதே நிலைதான். இந்த முறை மாற வேண்டும். எனவே தான் உ. பி. முதல்வர் வற்புறுத்துகிறார். வேற்று மொழி உண்டோ இல்லையோ, கல்வித்துறையில் அந்தந்த மாநில மொழிகள் கட்டாயம் இடம் பெற வேண்டும் என்கிறார். 1985-இல் நான் தஞ்சைப்பல்கலைக்கழகத்தில் ஆட்சிக்குழு (Syndicate) உறுப்பினராக இருந்த போது உலக நாடுகள் பல வற்றில் பயணம் செய்து அவ்வந்நாட்டுப் பல்கலைக்கழகங்கள், பள்ளிகள் ஆகியவற்றின் நிலை,முறை,வகை என்ற பலவற்றை