பக்கம்:நல்லவை ஆற்றுமின்.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

164 கல்லவை ஆற்று மின் உற்று நோக்கினேன். அவற்றுள் நல்லன பல. அவற்றை நம் நாட்டுக் கல்விமுறையில் புகுத்த வேண்டும் என்று என் நூலில் (ஏழு நாடுகளில் எழுபது நாட்கள்) பலவிடங்களில் சுட்டிக் காட்டியுள்ளேன். ஆரம்பப்பள்ளிமுதல் கல்லூரி உயர்மட்டம் வரையில் நாம் பின்பற்ற வேண்டிய பல நல்ல நெறிகள் பல விடங்களில் உள்ளன. சிறப்பாகப் பள்ளிநேரம் பலநாடுகளில் காலை எட்டு மணிக்குத் தொடங்கி ஒரு மணிக்கு முடியும் நிலை. இங்கே போக்குவரத்து நெரிசலுக்கு என நேரத்தை மாற்ற நினைக்கின்றனர். அதையும் செயல்படுத்த முடிவ தில்லை. ஆனால் உலக நாடுகளில் வாழ்க்கை நெருக்கடி நீங்கும் வகைக்கே என்றென்றும் பள்ளிகளும் அவற்றின் பணி நேரங்களும் அமைகின்றன. நாற்பது ஆண்டுகளுக்கு முன் நான் மலேயா சென்றபோது அங்கே இந்த நிலை கண்டு மகிழ்ந்தேன். கல்லூரிகளிலோ பட்டப்படிப்பு, உயர்மட்ட பட்டங்கள் பற்றிய ஆய்வு முறைகளை நாம் சில நாட்டுக் கொள்கைகளைப் பின்பற்றினால் நாடு உய்யும், நலம் பெருகும். அண்மையில் தென்காசியில் ஆசிரியர் தினவிழாவில் தமிழகக் கல்வி அமைச்சர் ஆயிரம் கோடிக்கும் அதிகமாகக் கல்விக்குச் செலவழிக்கப் பெறுகின்றது எனக் கூறியுள்ளார். இவ்வாறு கோடி கோடியாகச் செலவு செய்யும் கல்வி நாட்டுக்கு-சமுதாயத்துக்கு-மக்கள் நல்வாழ்வுக்கு வழி காட்டும் கல்வியைத் தரவேண்டாமா? ஆம்! வேண்டும். அந்த அடிப்படை உணர்விலே இக்கருத்துகளனைத்தையும் தங்கள் முன் வைக்கின்றேன். வழி காட்டுங்கள்! கல்வியினைப் பயனுடையதாகச் செய்யுங்கள். தமிழ்நாட்டில் மத்தியக் குழுவின் கீழ் அமைந்த பல பள்ளிகளில் மும்மொழித் திட்டம் உள்ளது. அதில் தமிழைக் கட்டாயம் ஆக்கும் வாய்ப்பு உள்ளது-ஆனால் தமிழ்நாட்டில் இருமொழித் திட்டத்தில் அந்த நிலை இல்லை. இருமொழிக்