பக்கம்:நல்லவை ஆற்றுமின்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருந்துமா? 15 பொருட்கு வேண்டுஞ் சில சொல்லாற் செய்யும் செய்கைத் தாகி' என உரை எழுதுகின்றார். எனவே தொல்காப்பியர் மரபியல் சூத்திரத்தைச் செய்யுளியல் சூத்திரத்தை உட் கொண்டே எழுதுகிறார் என்பது நன்கு புலனாகும். மேலும் செய்யுளியல் சூத்திரத்துக்கு வெளிப்படையாகத் தோன்றும் பொருள் என்று மட்டும் கொள்வது எப்படிப் பொருந்தும். அச்சூத்திரத்துக்கு இளம்பூரணர் உரை அவ்வாறு எளிமை உடையது என்னுமாறு அமைகிறது என்றாலும், பிற நச்சினார்க்கினியர், பேராசிரியர் உரைகள் அதன் உள்ளக்கிடக்கையை நன்கு எடுத்துக் காட்டுகின்றன. இளம்பூரணர். 'கண்ணாடி நிழல் போல விளங்கித் தோன்றி ஆராயாமல் பொருள் நனி விளங்குமாறு யாப்பின் கண்ணே தோன்றி யாப்பது என்று கூறி அதற்கு விளக்கம் தருகிறார். 'ஆடி நிழலின் அறியத் தோன்றுதலாவது சூத்திரம் படித்த அளவில் அதனால் சொல்லப்படுகின்ற பொருள் ஒருங்கு தோன்றுதல், 'நாடுத லின்றிப் பொருள் நனி விளங்குதலாவது அதன்கண் ஆக்கப்பட்ட சொற்குப் பொருள் ஆராயாமல் புலப்படத் தோன்றுமாறு யாத்தல்' என்கின்றார். இதற்கு மேற் கோளாகத் தொல்காப்பியரின் சொல்லதிகார வேற்றுமை யியல் முதல் சூத்திரத்தையும் காட்டுகிறார். எனினும் இதில் பொருள் ஒருங்கு தோற்றுவதில் அவர் நினைக்கும் நினைப்பி லேயே பிற உரைகள் செல்லுகின்றன. நச்சினார்க்கினியர் இச்சூத்திரத்திற்கு ஒரு பொருள் துதலுங்கால் கண்ணாடி சிறியதாயினும் அகன்று பட்ட பொருளை அறிவித்தாங்கு அறியத் தோன்றி, தெரிதல் வேண்டாதபடி அவ்வகன்ற பொருளை மிகவும் விளங்கு மாற்றால் செய்யுள தோன்றச் செய்து முடிக்கப்படுவது' என உரை கூறுகின்றார்.