பக்கம்:நல்லவை ஆற்றுமின்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 கல்லவை ஆற்றுமின் பேராசிரியரும் 'ஒரு பொருள் நுதலிய எனப்பட்ட சூத்திரம் பொருள் நுதலுங்கால் ஆடி சிறிதாயினும் அகன்று, பட்ட பொருளை அறிவித்தாற்போலத் தேர்தல் வேண்டாமை அவ்வகன்ற பொருள் அடங்கு மாற்றான் அச்செய்யுள் தோன்றச் செய்து முடிக்கப்பெறுவது என்கின்றார். இவ்வுரைகளை யெல்லாம் நோக்கின் ஓர் உண்மை நன்கு புலனாகும். அனைவரும் சூத்திரம் ஆடிநிழலைப் போன்றி ருக்க வேண்டும் எனத் தொல்காப்பியர் செய்யுளியலில் சொல்லும் கருத்தை ஏற்று அதற்குத்தக உரை வகுக்கின்றனர். ஆயினும் அவ்வுரையில் இருவர் ஆழ்ந்த பொருளை அமைத் துள்ளனர். இளம்பூரணம் இதற்கு மேலாகப் பொருள் கொண்டாலும், மற்ற இருவரும் ஆடி'யின் தன்மையை ஆராய்ந்து வெளியிடுகின்றனர். கண்ணாடி உருவிற் சிறிய தாயினும் உலகின் பல பொருள்களைத் தனது உள்ளடக்கிக் கொண்டு காட்டவல்லது. நெடுந்தொலைவில் உள்ள நம் கண்ணுக்கும் கருத்துக்கும் எட்டாத பொருளையெல்லாம் கொண்டுவந்து காட்டவல்லது. இன்று சிறப்பாகத் தொலை நாடியில் உள்ள கண்ணாடிகள் மிகச்சிறியனவாயினும் அண்ட கோளத்தின் பல பகுதிகளைப் படம் பிடித்துக் காட்டு கின்றனர். நெடுந் தொலைவில் சாதாரண மனிதனின் இக் க்ண்சளுக்கு விளங்காத பல பொருள்களை ஆடி அறிமுகப் படுத்துகிறது. எனவே அந்த முறைப்படி பார்த்தால் சூத்திரம் சாதாரண அறிவிற்குப் புலனாகாத பலப்பல உண்மைகளையெல்லாம் விளக்கத்தக்கதாக இருக்க வேண்டும். கண்ணாடிபோல சில சூத்திரம் அளவில் சிறியதாகவே இருப்பினும் பலப்பல பொருள் விளக்கத்தைக் கொண்டு காட்டுவதாக இருக்க வேண்டும். ஆயினும் அறியத் தோன்றி' என்றும், நாடுதல் இன்றிப் பொருள் நனி விளங்க' என்றும் செய்யுள் இயல் சூத்திரம் இருக்கிறதே என்ற ஐயம் எழலாம். அவற்றின் பொருளைச் சற்று ஆழ்ந்து சிந்திப்பின்