பக்கம்:நல்லவை ஆற்றுமின்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருந்துமா? 17 விளங்கும். கண்ணாடியின் முன் பட்ட பொருள் அறியத் தோன்றும்; அது போன்றே சூத்திரத்தின் பொருளும் எளிமை யின் அறியத் தோன்றவேண்டும். வேறு உதவியின்றி எளிதாய்ப் பொருள் விளங்கும் ஆடியில் அதுபோல் சூத்திரத்தின் பொருள் எளிதாக வேண்டும். ஆனால் மரபியலில் வரும் சூத்திர விளக்கம் இவ்வாறு இல்லையே என்பதே வினா. இந்த இரு தொடர்களுக்கும் உரையாசிரியர்களின் உரை களை நோக்கின் ஒர் உண்மை புலனாகும். கண்ணாடி சிறியதாயினும் அகன்று பட்ட பொருளை அறியத்தோன்றி எனவும் தெரிதல் வேண்டாதபடி அவ்வகன்ற பொருளை மிகவும் விளங்குமாற்றால் விளங்கச் செய்வது எனவும் கூறுவர் நச்சினார்க்கினியர். இளம்பூரணர் ஒருங்குதோன்றல் என்றும், பொருள் ஆராயாமல் புலப்படத் தோன்றுமாறு யாத்தல்’ என்றும் காட்டுவர். தேர்தல் வேண்டாம்ை அவ்வகன்ற பொருள் அடங்குமாற்றான். செய்யப்படுவது என்பர் பேராசிரியர். எனவே மூவருடைய உட்கிடையும் ஒன்றே எனக் கொள்ளலாம். மேலே காட்டியபடி அண்ட முகட்டு எல்லை வரையில் அளந்து காட்டும் ஆடி அக் காட்சியை விளக்கமின்றியோ, ஐயத்துக்கிடையிலோ காட்டு மாயின் அதனால் என்னபயன்? பரந்த இடத்தை மட்டும் படம் பிடித்து, அப்படம் விளக்கமாக இல்லையாயின் அப்புகைப் படத்தை யாரே விரும்புவர். எனவே அறியாப் படாத பல வுண்மைகளைக் காட்டுவதோடு, கண்ணாடி அவற்றைத் தெளிவாகவே காட்ட வேண்டும். இன்றேல் ஆய்வுக்களத்தில் ஐயத்துக் கிடையிலே என்ன செய்ய முடியும்? இதே நிலை சூத்திரத்துக்கும் பொருந்தும். ஒரு சூத்திரத்தைப் படிக்கும் போது அது காட்ட வந்த பொருளை அது நன்கு தெள்ளத் தெளியக் காட்ட வேண்டும். அதை விளக்குவதற்கு வேறு சூத்திரங்களோ பிறவோ தேவை