பக்கம்:நல்லவை ஆற்றுமின்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 நல்லவை ஆற்றுமின் இல்லாத வகையில் விளக்கத்துக்குப் பிறவற்றை நாடுதல் இன்றி-எடுத்த பொருள் எத்துணை பெரியதாகவும் விரிந்த தாகவும் இருப்பினும் நன்கு விளக்க வேண்டும். இந்தக் கருத் 'தைத்தான் செய்யுள் இயல் சூத்திரம் உணர்த்துகிறது. இதைத் தான் உரையாசிரியர்களும் அவ்வாறு விளக்கிக் காட்டி உணர்த்துகின்றார்கள். இனி இதை அறியத் தோன்றி நாடுதல் இன்றிப் பொருள் நனிவிளங்க' என்ற தொடருக்கு ஒரு விளக்கம் போன்றே மரபியல் சூத்திரம் விளக்குகின்றது. ஆடி, காட்டும் பொருளைத் தன்னகத்தடக்கி எத்துணைப் பெரியதையும் ஐயத்துக்கு இடமின்றி, அளக்க முடியாத வகை யுடையதனையும் துளக்கலாகா வகையில் பலருக்கும் பயன் தந்து விளக்குவது போன்றே சூத்திரமும் சொல்லுங்காலை, தான் சொல்லும் உரை அடக்கி, காட்டும் பொருளின் உண்மையையும் அளவிட முடியாப் பருமையும் காட்டும் நிலையில் அளவறுக்க முடியாத அரும் பொருள் தருவதாகி. பலவகையானும் பலருக்கும் பயன் தந்து விளக்குவதாகும், எனவே மரபியல் சூத்திரம் செய்யுளியல் சூத்திரத்தின் ஓர் அடியின் விளக்கமாகவே வந்துள்ளது. ஆகையினால் இதில் தொல்காப்பியர் இருவேறு கருத்தை வெளியிட்டார் என்று கொள்ள வேண்டுவதில்லை. அதிலும் இந்த இருபதாம் நூற்றாண்டுக்கு இடையில், ஆடியின் துணை கொண்டு ஆய்வுக்களத்தில் அல்லும் பகலும் ஆய்ந்து காணாதவெல்லாம் கண்டும் காட்டியும் அறிவுறுத்தும் நிலையில்-ஐயத்தின் நீங்கித் தெளிந்து வானத்தை வையத்தினும் எளிமையாக விளக்கிக் காட்டும் வகையில் - அதற்கெலலாம் அடிப்படையாக அமையும் அந்த ஆடி'யின் திறம் வியக்கத்தக்க ஒன்றன்றோ! ஆம்! அதே வகையில் வியக்கத்தக்க அளவிலாப் பொருளையும் ஐயத்துக்கு இடமின்றித் தெளிவாக விளக்குவதே சூத்திர மாகும்.