பக்கம்:நல்லவை ஆற்றுமின்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 கல்லவை ஆற்றுமின் என்பது அவர் வாக்கு. எனவே முருகன் அணுவுக்கணுவாய் அப்பாலுக்கப்பாய், அனைத்தையும் தன்னுள் அடக்கி, வாழவைக்கும் அளவிலா ஆற்றலுடைய அண்ணலாவான். அத்தகைய இறைவன் அடியவர் பொருட்டால் ஆற்றிய ஆடல்கள் பலப்பல. அவற்றுள் ஒன்றே வள்ளியம்மையார் திருமணம். பக்குவப்பட்ட உயிரினைத் தானே வந்து தலையளித்து ஆட்கொண் டருளும் சிறப்பே இதில் பேசப்பெறுகின்றது. இந்த நிலை பற்றிப் பலப்பல அறிஞர்கள் விளக்கியுள்ளனர். எங்கோ கிடந்து, யாவற்றுக்கும் மேலாய் இறையை எண்ணி ஏங்கும் உயிரைநாடி எங்கேனும் யாதாகிப் பிறந்திடினும் தன்னடியார்க் கிங்கே என்றருள் செய்யும் நிலையில் வள்ளி யினை உள்ளி வந்து உடன் இணைத்துக் கொண்ட வரலாறே நம் வரலாறுதான். முருகன் திருவிளையாடல்களைப் பாடிய கச்சியப்பர் அவன் ஆடலை நல்ல உவமையால் நமக்குத் தெளிவாக உணர்த்துகின்றார். திணைப்புனத்தில் காவலில் இருந்த வள்ளியம்மையாரிடம் காதலால் உருகும் நிலையினைப் படம் பிடித்துக் காட்டும் பாவலர், சாதாரண மனித நிலையிலேயே அவனைக் காட்டுகிறார். தமிழ்நாட்டு மரபுப்படி களவு மணத்தில் வள்ளியைக் கைக் கொண்ட வரலாற்றினை அத் தமிழ் மரபின் அடிப்படையில் விளக்குகிறார். ஊர்வினவி, பேர்வினவி. உற்ற வழி வினவி, தன்னை ஏற்றுக் கொள்ள இறைஞ்சுகின்றான். அவன் அவ்வாறு இறைஞ்சும் நிலையை நினைத்தே அருணகிரியார் மதிவாணுதல்:வள்ளியை அல்லது பின் துதியா விரதா என அனுபூதியில் பாடுகிறார் என எண்ண வேண்டியுள்ளது. அத்தகைய இறைவன் தன்மையினைக் கச்சியப்பர்,