பக்கம்:நல்லவை ஆற்றுமின்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இறைநிலை 37 "உலைப்படு மெழுகதென்ன உருகியே ஒருத்தி காதல் வகைப்படு கின்றான்போல வருங்தியே இரங்காகின்றான் கலைப்படு மதியப்புத்தேள் கலங்கலம் புனலில்தோன்றி அலைப்படு தன்மைத்தன்றோ அறுமுகன் ஆடல் - எல்லாம் (வ. திரு. படலம் 7) எனக் காட்டி உண்மை நிலையினை விளக்குவர். நெருப்பிடை யிட்ட மெழுகென உருகி, அவள் காதல் வலைப்பட்டு இரங்கி வருந்துகிறான் இறைவன். ஆம்! ஆனால் உண்மையில் அவன் நிலை என்ன? அன்னையின் நிலை என்ன? அந்த அருட் சக்தி யினை ஆண்டவன் பிரிவ தேது! பிரியின் உலகம் ஏது? ஆனால் இவ்வாறு விளையாடு நிலை! கச்சியப்பர் அந்த நிலையினை அழகிய உவமையால் விளக்கிவிட்டார். வானத்திலே சந்திரன் வட்டமிடுகின்றான். அவன் தன் அறுதியிட்ட கோட்டில் அமைதியாக உலகைக் கண்டு சென்று கொண்டே இருக்கின்றான். ஆனால் தரையில் உள்ள தண்ணிரில் அவன் உருவம் தெரிகின்றது. நீரில் இறங்குபவர்கள் அன்நீரை அலைக்கிறார்கள். நீர் அலைய உடன் அந்த நிலவொளி காலும் சந்திரனும் அசை கின்றான், அலமருகிறான். அந்த அசைவினைக் கண்டு, இது தான் சந்திரன் நிலை என்று யாரே முடிவு கட்டுவார்கள்? சந்திரன் எங்கோ வானவீதியில் வட்டமிடுகிறான். அவன் சாயல் இங்கே நீர் அசைய நிலை அசைகின்றது. இந்த ஒரு நீர்நிலையினைப் போன்று பலகோடி நீர் நிலைகளிலும் இச் சந்திரன் அசைவு பரந்து இருக்குமல்லவா! 'ஆம் அறுமுகன் நிலையும் அத்தகையதே. யாண்டும் நீக்கமற நிறைந்து யாவற்றையும் இயக்கி, அவற்றின் உள்ளும் புறமும் ஒருங்கிருந்து உயிர்தொறும் பரந்த கள்ளனாய் நின்ற அவன் இங்கே இவ்வாறு ஆடல் புரிந்து உயிர்களை ஆட்கொள்ளு கிறான் என்பதைக் கச்சியப்பர் நன்கு உவமை வாயிலாகக் காட்டி விட்டார். மானைக் காட்டி மானைப் பிடிக்கும்