பக்கம்:நல்லவை ஆற்றுமின்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எங்கும் சிவனருள்! யாவினும் அவனருள் 41 சம்பந்தர், அப்பர். சுந்தரர் போன்றார் வரலாற்றிலும் பிற செயற்கருஞ் செய்கை செய்த அடியவர் வரலாறுகளிலும் இந்த அருளை விளக்கக் காட்டுகிறார். - அப்பரடிகள் தம் தமக்கையாரைத் தமக்காக வாழ வேண்டுமென வேண்ட, அத் திலகவதியாரும் வாழ இசைந் தார். ஆனால் சேக்கிழார் தம்பியார் உளராக வேண்டும் என வைத்த தயாவினால் அவர் வாழ்ந்தாலும், அவர் அனைத் துயிர்க்கும் அருள் தாங்கி (திரு 34) வாழ்ந்தார் என்றே குறிக் கின்றார். இறைவன் அருளை மறைத்து, பின் அந்த அருள் வெளிப்பட்ட நிலையினை அப்பர் வாழ்வில் சுட்டிக்காட்டச் சேக்கிழார் தவறவில்லை. அப்பர் சமண சமயம் சார்ந்த பொழுது நம்பர் அருளாமையினால், (திருநா 37) என்று முன்னர் கூறிய சேக்கிழார், பின் அவர் சைவமாம் சமயம் சார்ந்து திருவதிகை விரட்டானத்தில் தேவாரத்தின் முதற் பாவாகிய, கூற்றாயினவாறு தொடங்குமுன் தம்பிரான் திருவருளால் உரைத் தமிழ்க் கலைகள் சாத்தும் உணர்வு பெற்றார் (திரு 69) எனக் காட்டுகிறார். எனவே அருளை மறைத்தும் வெளிப்படுத்தியும் ஆண்டவன் எவ்வகையானும் உயிர்களை உடனிருந்து காத்து ஒம்புகிறார் என்று, எங்கும் சிவனருள் எதிலும் அவனருள் என்பதை உலகுக்கு உணர்த்து கிறார் சேக்கிழார் பெருமான். சுந்தரர் வாழ்க்கை அனைவரும் அறிந்த ஒன்றே! ஒரு மணத்தைச் சிதைவு செய்த இறைவனைக் கொண்டே இரு பெண்களை மணந்தவரல்லவா அவர். இறைவனால் ஆட்கொள்ளப் பெற்று, திருவெண்ணெய் நல்லூரில் திருவருட்டுறையில் சென்று புக்கபின்-ஆம்-திரு அருள் துறை தான்-கண்டிலர்-திகைத்து நின்றார். பின் இறைவன் விண் னிடைத் தோன்றி அருளினார். அதைச் சேக்கிழார் 'அண்ணலை ஒலை காட்டி ஆண்டவர் அருளிச் செய்வார்’ ந-3