பக்கம்:நல்லவை ஆற்றுமின்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 கல்லவை ஆற்றுமின் (தடு-69) என்று கூறி, மேலும் பித்தா எனப் பாடுமாறு கூறிய இடத்தில் அன்பினை அருளின் நோக்கி அங்கணர் அருளிச் செய்வார் (தடு 73) என்று நோக்கிலும் சொல்லிலும் இறையருள் பரிவதைச் சுட்டிக் காட்டுகிறார். பின் சுந்தரர் "பித்தா பிறைசூடி என்று பாட வரலாறு செல்கிறது. இதே சுந்தரர் திருவாரூர் பரவையாரைக் கண்டபோதும் பரவையார் இவரைக் கண்டபோதும் இறையருளாகவும் இறையருள் பெற்றவராகவும் சேக்கிழார் நமக்குக் காட்டு கிறார். சுந்தரர் பரவையாரைக் கண்டதும், 'கற்பகத்தின் பூங்கொம்போ! காமன் தன் பெரு வாழ்வோ! பொற்புடைய புண்ணியத்தின் புண்ணியமோ! புயல் சுமந்து விற்குவளை பவள மலர் மதி பூத்த விரைக் கொடியோ! அற்புதமோ! சிவனருளோ! அறியேன் என்றதிசயித்தார்’ - (தடு 140) ன்ன்று கூறுவதாகச் சேக்கிழார் காட்டுகிறார். ஏதேதோ எண்ணி இறுதியில் அது சிவனருளே என முடிவு செய்யும் வகையில் சிவனருளோ என இறுதியில் அமைத்துக் காட்டு கிறார். அப்படியே சுந்தரரைக் கண்ட பரவையார், 'முன்னே வந்து எதிர் தோன்றும் முருகனோ! பெருகொளியால் தன்னேரில் மாறனோ! தார் மார்பின் விஞ்ஞையனோ! மின்னேர்செஞ் சடையண்ணல் மெய்யருள் பெற்றுடையவனோ! என்னே என் மனம் திரித்தது இவன் யாரோ என - கினைந்தார்!’ என்று கூறியதாகக் காட்டி இறைவன் அருள் பெற்றவன் தான் (தடு-144) என்பதை இறுதியாகக் கூறி நிறுவுகிறார். பின் பரவையார் சென்ற திக்கை நோக்கி, அவர் மறைய "ஈசனார் அருள் எந்நெறிச் சென்றதே (தடு. 152) என்று