பக்கம்:நல்லவை ஆற்றுமின்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 கல்லவை ஆற்றுமின் தளர்ச்சி இன்றிப் பல தலங்களைத் தரிசித்தார். இறை வனிடம் பொருள் பெற்றுத் தந்தையின் யாகத்துக்கு உதவினார். அருட்பாடல் பாடி அடியவர் தம் விடநோயை நீக்கினார். தமிழ்நாடு முழுவதும் உள்ள சிவத்தலங்களைத் தரிசித்தார். இவர் காலத்து வாழ்ந்த அடியவர் பலர். அவருள் மிக முக்கியமானவர்கள் திருநாவுக்கரசரும் சிறுத் தொண்டரும் திருநீலகண்ட யாழ்ப்பாணருமாவர். திருநீலகண்ட யாழ்ப்பாணர் தாழ்வாக எண்ணப்பெறும் LurraõõTri குலத்துப் பிறந்தவராயினும், சம்பந்தர் அவருடனேயே எல்லாத் தலங்களுக்கும் சென்றார். இவர் பதிகம் பாட, அவர் அதை யாழில் இசைப்பார். அதை அறிந்த பாணனார் சுற்றத்தார் பெருமையுற, அவர்தம் ஊராகிய தருமபுரத்திலேயே யாழில் அடங்காத யாழ்முறிப் பாடலைப் பாடினார். திருமருகலில் ஒரு பெண்ணை மணம் புரிய இருந்த கணவன் பாம்புக் கடியால் இறக்க, பதிகம் பாடி அவனை உயிர்ப்பித்தார். திருவிழிமிழலையில் திருநாவுக்கரசருடன் தங்கிய போது பஞ்சம் உண்டாக, இறைவனிடம் காசுபெற, தம் காசு வாசி பெற வேண்டிய நிலையில் அமைய, வாசி தீரவே காசு நல்குவீர் என்று பாடி வாசி நீங்கப் பெற்றார். திருமறைக்காடு எனும் வேதாரணியத்தில் இவரால் அப்பர்' என அழைக்கப் பெற்ற திருநாவுக்கரசர், வேதத்தால் மூடப் பட்டுக் கிடந்த கதவினைத் திறக்கப் பாட, இவர் மூடப் பாடினார். பின் பாண்டிய நாட்டில் கூன் பாண்டியனும் அவன் மக்களும் சமண நெறி நிற்க, அவன் துணைவியாராகிய சோழர் மகளாம் மங்கையர்க்கரசியார் சைவ நெறி நின்று சம்பந்தரை அங்கே அழைத்தனர். அமைச்சர் குலச்சிறை யாரும் பிற சைவர்களும் இவரை வரவேற்றனர். இவரும் அங்கே சென்று சமணருடன் அனல் வாதம், புனல் வாதம் ஆகியவற்றில் வென்று, பாண்டியனின் வெப்பு நோயினைப்