பக்கம்:நல்லவை ஆற்றுமின்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருஞான சம்பந்தமூர்த்தி நாயனார் 57 போக்கி, கூனையும் நிமிர்த்தி நீன்றசீர் நெடுமாறனாக்கி பாண்டியநாடு முழுவதையும் சைவ நெறிக்கு மாற்றி அமைத் தார். பின் வடக்கே தொண்டை நாட்டுத் தலங்கள் பலவற் றைத் தரிசித்து. காளத்திவரையில் சென்று, அங்கிருந்தபடியே கயிலாயம், கேதாரம். கோகர்ணம், இந்திர நீலபருப்பதம், பருப்பதம், அநேகதங்காபதம் ஆகிய வடநாட்டுத் தலங்களை யும் பாடி, திரும்பவும் பலவிடங்களில் இறைவனை வழி பட்டுத் திருஒற்றியூர் அடைந்தார். பின் திருமயிலை சென்று சிவநேசர் மகளார்-பூம்பாவையை - எலும்பாக இருந்த குடத்தை முன் வைத்து, மட்டிட்ட புன்னையங்கானல் என்ற பதிகம்பாடி, இறைவனின் பலவிழாக்களைக் காணாதே போதியோ பூம்பாவாய்’ என விளித்து எழுப்பித் தந்தனர். பின் பல தலங்களைத் தரிசித்து, தம் ஊர் சீர்காழியினை அடைய, அப்போது அவருக்கு வயது பதினாறு ஆயிற்று, எனவே தந்தையார் மணமுடிக்க நினைத்து ஏற்பாடு செய்ய, திருநல்லூர் நம்பியாண்டார் நம்பியின் திருமகளை மணக்க இசைந்தார். மணநாளில் அவ்வூர்த் திருக்கோயிலிலே வந்திருந்த அடியார்களுடனே இறைவன் அருட்சோதியில் வைகாசி மூலத்தில் ஒன்றிக் கலந்து உயர்நிலையுற்றார். ‘தீதகற்ற வந்த திருஞான சம்பந்தர். இவர் சோதியுட்புக்க நிலையினைச் சேக்கிழார் "காதலியைக் கைப்பற்றிக் கொண்டுவலம் செய்தருளித் தீதகற்ற வந்தருளும் திருஞான சம்பந்தர் நாதனெழில் வளர்சோதி நண்ணிஅதன் உட்புகுவார் போதநிலை முடிந்தவழிப் புக்கொன்றி உடனானார்' (2531) எனக் காட்டுவர். ந-4