பக்கம்:நல்லவை ஆற்றுமின்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72 கல்லவை ஆற்றுமின் கொண்டு உள்ளமையின் இவர் உரையாசிரியர் எனவும் சமய போதகர் எனவும் போற்றப் பெற்றார். சந்தர்ப்பத்திற்கேற்ற சந்தத்தில் பெரியபுராணப் பாடல் கள் அமைகின்றன; சமணர்கள் ஏவிய யானை வந்த வேகத்திலும் (திருநா. 111-114) வேறுபல இடங்களிலும் இந்த உண்மை விளங்கக் காணலாம். சுடுசொற்களையோ, கடுஞ்சொற்களையோ சேக்கிழார் கையாண்டார் என்று கூறவியலாது. மெய்ப்பொருள் நாயனாரைக் கொலை செய்ய வந்த தத்தன் அவரைக் கொன்றான் என்பதை, தான்முன் நினைத்த அப்பரிசே செய்ய என்ற விடத்திலும் வேறுபல விடங்களிலும் இவ்வுண்மையினைக் காணலாம். 'அந்தணர் வேறோர் அந்தணர்க் கடிமையாதல் இல்லை என்றதைத் தடுத்தாட்கொண்டபுராணத்தால் மறுத்தும் அப்பூதி அடிகளார் அப்பரை வழிபட்டவிடத்தில் சாதிவேறுபாடற்ற நிலையை விளக்கியும் பிறவிடங்களிலும் சமுதாயச் சீர்திருத் தத்தைப் பெரியபுராணம் காட்டியிருக்கிறது. சிந்தாமணிக்கு மாறுபட்ட வகையில் அமைந்த நூலாக இருந்தமையாலும் தம் சமயத்தில் மேலிருந்த ஆழ்ந்த பற்றி னாலும் அப்பர், சம்பந்தர் போன்றார் வரலாறுகளில் சமணர் களைச் சற்றே அதிகமாய்ப் பழித்த நிலைகள் எண்ணத்தக்கன வாம். ஆயினும் சாக்கியநாயனார் புராணத்தில் அவர் அச்சமய (புத்த) நிலை நின்றே தம்மைத் தொழுதபோதும் க்ல்லால் தம்மை எறிந்த போதும் மகிழ்ந்து முத்தி அளித்த சிவனருள் நிலையைக் கூறும் போது தம் சமரச உணர்வைக் காட்டுகிறார். பெரிய புராணம் சமய நூலாக அமையினும், இது அக்கால வரலாறு, சமுதாய நிலை, ஆட்சிமுறை, தமிழக இயற்கைவளம் பரந்த பாரதத்தின் எல்லை, (திருநாவுக்கரசர் புராணம் முதலிய இடங்களில்) இனப்பற்று, நாட்டுப்பற்று