பக்கம்:நல்லவை ஆற்றுமின்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நந்தனின் ஆதனூர் 73 இவை கொள்ள வேண்டிய நெறி அனைத்தையும் விளக்கும் ஒருபெரு நூலாகும். இந்நூல்வழி இன்றும் பல அறிஞர்கள் தமிழ் நாட்டு வரலாற்றை ஆராய்தல் கண்கூடு. தமிழ் உள்ள வரையில் பெரியபுராணமும் சிறந்து விளங்கும் என்பது தெளிந்த உண்மையாகும். நந்தனின் ஆதனூர் நந்தனார் பிறந்த ஊர்தஞ்சை மாவட்டம், மயிலாடுதுறை யினைச் சார்ந்த ஆதனூர் என்றே கொள்ளல் பொருந்துவ தாகும். மேலா நல்லூர்-மேற்கா நாட்டு ஆதனூர்என்பதே அவர் ஊராகும். மேற்கா நாடு என்பது அரசாங்கப் பதிவேடுகளில் குறிக்கப் பெற்றிருக்கும் என எண்ணுகிறேன். இந்த நூற்றாண்டின் தொடக்கத்திலே (1921-30 அ 1931-40) ஊர்களை மாவட்டங்கள் தோறும் வகைப்படுத்தி அன்றைய அரசு வெளியிட்ட அரசாங்க ஏடுகள் அந்த மாவட்ட அலுவலகங்களிலும் சென்னை எழும்பூர் தொல் ஆவணக் காப்பகத்திலும் இருக்கின்றன. அப்படியே திருப்புன்கூர் புள்ளிருக்குவேலூர் ஆகியவற்றிற்குக் கிழக்கே கிழக்கா நாடு அல்லது கீழ்நாடு என்ற ஊரோ அல்லது வட்டமோ அல்லது நாட்டாண்மைத் தலைநகரோ இருக்க வேண்டும். அந்த கிழக்கா நாட்டிலும் ஒர் ஆதனூர் இருந்திருக்க வேண்டும். தென்திருமுல்லைவாயில் வடதிருமுல்லைவாயில், வடகாசி தென்காசி, காஞ்சி, வடகாஞ்சி என்பன போன்று மேல்கீழ்தெற்கு வடக்கு எல்லையிலமைந்த ஒரே பெயருடைய ஊர்களை அவ்வத்திசைகளைக் கொண்டு அவ்வத் திசையிலும் நாடு அல்லது நாட்டாண்மை எல்லை கொண்டும்அவற்றுடன் இணைத்தும் வழங்கி இருப்பர் (தஞ்சை 西一5