பக்கம்:நல்லிசைப் புலவர்கள்.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

懿 நல்விசைப் புலவர்கன்

விருத்தியுரையில் இவர் பாடி யதாகக் கொள்ளும் வண் ணம் வைத்துக் காட்டியிருக்கிற ஏரி யிாண்டுஞ் சிறகா" என்ற பாட்டில், காஞ்சி நகரத்தின் மதில் முதி லானவற்றை மயிலின் வயிறு முதலிய உறுப்புக்களாக உருவகித்து, அங்ககரை மயிலோடு உவமித்துக் கூறி யிருத்தலின், அந்நகரமே இவர் பிறந்த ககரமாகவேனும் அன்றி இவர் பன்ள்ை வாழ்ந்திருந்த நகரமாகவேனும் இருக்கக் கூடுமென்று ஊகிக்கலாகும்.

குலம் : இவர் பிறந்த குலம், நம் தமிழ் காட்டுப் பழங்குடியினுள் இதுவாமென அறிதற்குரிய சான்று கள் இல்லை.

சமயம்: இவரது சமயம் இன்னதெனத் துணிக் துசைத்தற்கு இடமில்லையாயினும் முரசுகடிப் பிகுப் பவும்” என்ற இவரது புறப்பாட்டில் கடையெழு வள்ளல்களின் வரலாறுரைத்த பகுதியில், ஆவியர் குடி யிற் பிறந்தவனும், வேளாவிக் கோமான் பதுமனது வழித்தோன்றலும், முருகக் கடவுள் வரைப்பாகிய பொதினி மலே (பழனி மலே) நாட்டுக்குரியவனுமான பேகன் என்னும் வள்ளலே, அருந்திறற் கடவுள் காக் கும் உயர்சிமைப் பெருங்கல் நாடன், என்று பாடி அவ னது மலே காட்டை முருகக் கடவுளால் காக்கப்படுதலேக் கொண்டு விசேடித்திருக்கின்றமையின், இவர் முருகப் பிரான்மீது அன்பு பூண்டவர் என்று கருதலாகும். குறிஞ்சிக்குத் தெய்வம் முருகனேயாதலின், இவ்வடி யிற் குறித்த கடவுள் முருகனேயாமென்பது தேற்றம். அருந்திறல் என்ற அடைமொழியும் இதனே வலியுறுத் தும். ஈண்டுக் கூறிய பேகனது மலேயும் ஊரும் இக் காலத்துப் பழனி என வழங்கும் மலேயும் ஊருமேயா மென்பது, வழங்கும் பெயர்களானும், வேறு சான்று