பக்கம்:நல்லிசைப் புலவர்கள்.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

薰器 நல்லிசைப் புலவர்கள்

வார், அரிசில் கிழார் என்ற புலவர்களும் பாடியிருத்த லான் அவர்களும் இவர் காலத்தவர்கள். பரணர் அதிக மானப்பாடினரென்பது, அவன் கோவலூரை வென்ற போது புகழ்ந்து பாடிய ஒளவையார், 'இன்றும் : ன்ை பாடினன் மற்கொன்,' எனக் கூறுதலால் அறியப் படும். பொன் முடியார் பாடினரென்பது, தகடூர் யாத் திசைச் செய்யுட்களால் தெளியப்படும். அரிசில் கிழார் பாடியது, அதியமான், தகடூர் பொருது வீழ்ந்தமைக்கு அவர் இரங்கிப்பாடுதலாலும், தகடுர் பொருதுவென்ற பெருஞ்சேரலிரும்பொறையைப் பின்னர்ப் பதிற்றுப் பத்து எட்டாம் பத்தால் புகழ்ந்துரைத்தலானும் அறி யப்படும். பரணர், குமணனுக்குப் பல ஆண்டுகட்கு முன்னிருந்தவர்களான உருவப்பஃறேர் இனஞ்சேட் சென்னி முதலிய பழைய அரசர்களேயும் பாடியிருத்த லான், அவருக்கும் அவரது சம காலத்தவரான கபிலர் ஒளவையாருக்கும் இவர் வயதில் இளே ஞராய், அவர்கள் முதியராயிருந்த காலத்தில் விளங்கி, அவர்களுக்குப் பின் னரும் பல ஆண்டுகள் இருந்து வாழ்ந்திருந்தவராவர்.

காலம் : கடையெழு வள்ளல்களுள் ஒருவணுகிய அதியமான் அஞ்சியைப் பாடிய பெருஞ்சித் திரளுர், பின் குமணனைப் பாடும் போது 158 ஆம் புறப்பாட்டில், எழுவர் மாய்ந்த பின்றை” என்று குறித்திருத்தலான், குமணனிடம் புலவர் பரிசில் பெற வந்த காலத்துக்குச் சிறிது முற்பட்டே அஞ்சி இறக் தொழிந்தான்ென். தும். அவனே வள்ளல்களுள் பிற்பட்டு இருந்தவனென் பதும் அறியக் கிடக்கின்றன. ஆகவே, பெருஞ்சித்தி, அர் கடையெழுவள்ளல்களுள் சிலரது காலத்திலிருந்து,

1. புறம், 99. 2. புறம். 20.