பக்கம்:நல்லிசைப் புலவர்கள்.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Hić நல்லிசைப் புலவர்கள்

யால் வாடிய புலவர் சுற்றங்களே வள்ளியோர் உணலை உண்பித்து வருத்தம் நீங்குதற்குக் கோடையால் வாடிய புலத்தை, மழை துளியைச் சொரிந்து குளிர்ப்பித்தலே யும், வறுமைத் தன் பத்தோடு வெளிமான் இறந்த பிரிவுத் துன்பமும் சேர்ந்து தம்மைவருத்துதற்கு மழை. பெய்யும் கள்ளிரவில் கப்பல் கவிழக் கடல் நடுவிற் கண் னில்லாத ஊமன் விழுந்து வருந்துவதையும், இரவலரும் புலவரும் கொடைப் பொருள் பெற்று இன்புறக் குமணன் தோன்றி விளங்குக் தன்மைக்குக் கோடை காலத்தில் உயிர்த் தொகுதிகள் நீருண்டு இன் புறக் கங்கையின் வெள்ளம் பெருகித் தோன்றுவதையும் ஒப்பிட்டுக் கூறியுள்ளார்.

இவரது பத்துப் பாட்டுக்களிலும் இன்றியமையாத எட்டு அளபெடைகள் வந்துள்ளன. அவைகளும், ஏற்ற பெற்றி அமைந்துள்ளன. துன்புறுவாள் என் பது துன்புறுவி என்று பயின்றுள்ளது. 'அலம்வருதல்' என்ற உரிச்சொற்போன்ற உலம் வருதல் என்ற சொல் லும் வந்துளது. இப்புலவர் பாடல்களில் குமணனது முதிர மலேயும், பாரியின் பறம்பு மலேயும், ஒரியின் கொல்லிமலேயும், அதியமான் நெடுமானஞ்சியின் குதிரை மலையும், கங்கையாறும் பாராட்டப் பெற்றுள்ளன. புலவர், 158, 160, 163-ஆம் புறப் பாடல்களிற் குறித்த குமணனது முதிர மலை இக்காலத்துக் கொங்கு காட்டி லுள்ள (கோயமுத்தூர் ஜில்லா உடுமலைப் பேட்டைத் தாலுக்கா) குதிரை மலேயே என்றும், அதுவே இங் வனம் மருவி வழங்குகின்றதென்றும், குமணனிருந் தாண்ட அம்மலேயை அடுத்த நகர், இக்காலத்தில் அக் கொங்கு நாட்டில் ஆம்பிராவதிக் கரையிலுள்ள குழு மம் என்று வழங்கப்படும் ஊரே என்றும் சரித்திர அறி.