பக்கம்:நல்லிசைப் புலவர்கள்.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

i

5. பிசிராந்தையா

சந்தனப் பொதியச் செந்தமிழ் முனிவனும் சவுந்தர பாண்டிய னெனுந்தமிழ் நாடனும் சங்கப் புலவரும் தழைத்தினி திருத்த மங்கலப் பாண்டி வளநாட்டில்’ பீசிச் என்னும் ஊரிலே, இற்றைக்குப் பன்னுள் ருண்டுகட்கு முன்னர், சங்க காலத்தில், ஆந்தையார் என்னும் புலவர் தோன்றினர். இவர் இளம்பருவ முதலே கல்வி பயிலத் தொடங்கித் தொல்காப்பியமுதற் பல் காப்பியங்களையும் பல்காற்பயின்று. உண்மை ஞான மும் உயரிய ஒழுக்கமும் உடையவராய், கல்லிசைப் புல வர் குழாத்துள் பல்லிசை நிறுத்தும் பண்பு மிகுந்து விளங்கினர்.

பின்னர் இவர் நல்லறமாகிய இல்லற குெறியிற் செல் லக் கருதி, அதற்கு நற்றுணேயாக ஒரு கற்பு மிக்க பொற் புறு மங்கையரை மணந்தார். இருவரும், காகத்தின் இரு கண்ணிலும் ஒரு மணி கலந்ததுபோல, உடல் இரண்டும் உயிர் ஒன்றுமாகக் கலந்த உள்ளமுடையவராய், எல்லா உயிர்களிடத்தும் அன்பும் அருளும் மிகுந்து, அறநெறி யைக் கடைப்பிடித்தொழுகி வந்தனர். புலவர் மனேவி யாரும் இயற்கையாகவே பெற்றிருந்த அறிவின் மாட் யோடு புலவரது கூட்டுறவால் கல்வியறிவும் கிரம்பி, கல் லிசைப் புலமை வாய்ந்த மெல்லியராய் விளங்கினர். இவர்தம் திருவுதரத்தினின்றும் நாளடைவில் கன்மக் கள் பலர் தோன்றினர். அவர்களும் ஆண்டுகள் செல்வச் செல்ல, மகனறிவு தந்தையறிவு என்பதற்கேற்ப, ஒள்ளிய அறிவால் தெள்ளியராயினர். இத்தகைய