பக்கம்:நல்லிசைப் புலவர்கள்.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெருஞ்சித்திரளுர் Hig

வல் என்ற பறவை வகைகளும் பலா, பனே, ஆசினி, மூங்கில், சுரபுன்னே, வாழை, கள்ளி, கூவிளம் என்ற மர வகைகளும் ஐவனம், தினே என்ற தான்ிய வகைகளும் குறிக்கப்பட்டுள்ளன. நெய்யடிசில், குய்த்துவையல், மோ என்ற தூய உணவு வகைகளும் வந்துள்ளன. பலாப்பழம், முட்புறக்கனி' எனவும், கழுகு, செவி செஞ்சேவல் எனவும் கூறப் பெற்றுள்ளன. இவர் முதியவராய் இறந்தோர்களைக் கவிழ்த்துப் புதைக்கும் சிதுமக்கட்டாழியைக் குறித்துள்ளார். சுடுக்ாடு, ஒள ரியம்பறந்தலே எனக் கூறப்பட்டுள்ளது. அருஞ்சுரத்தில் வேடர் ஆறலேத்தல் குறிக்கப்பெற்று ள்ளது. இன்னும் இவர் பாட்டுக்களில் பேய், ஞாயிறு, அழல், மதி, விண் மீன், கடல், ஆறு, கடவுள், முகில், இடி, மரக்கலம், முத்து, பொன் வட்டில், அடுகலம், அட்டில், தொடி அணி, மது என்பவையும் குறிக்கப்பட்டுள்ளன. கண வனே இழந்த மகளிர் வளை கழித்தல் வழக்குக் கூறப் பெற்றுள்ளது. யானே, மணியிரட்டப் போதல் சொல்லப்பட்டுள்ளது.