பக்கம்:நல்லிசைப் புலவர்கள்.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒளவையார் 17;

விரிய வொற்றிப் பாடி கின்ற பன்னுளன்றியும், எனத் தம் தொழில் குறித்திருப்பதும் : 208-ஆம் புறப்பாட் டில் காவினெங் கலனே சுருக்கினெங் கலப்பை,” என இவர் கூறியிருப்பதும், கலம், யாழுமாம்,' என அதற் குரையாசிரியர் உரைத்ததும்; இவர் தொண்டைமானு: ழைத் தூது சென்றதும்; பாணர்களைத் தம் சுற்றங்க ளாகப் பல்லிடத்தும் கூறியிருப்பதும் ஒளவையார் பாணர் சேரியில் வளர்ந்தவர், என்னும் கர்ண பரம்பரை யும் ஒளவைப் பாட்டி என்ற இவரது பெயரின் பெரு வழக்கும் ஏற்ற சான்றுகளாகும். (பாட்டி-இசையோடு பாடுபவள்.)

"முற்காலத்துப் புலவர்கள், தங்களை அரசராற்பெரி தும் மதித்துப் போற்றப்பட்டுவந்த பாணர்போல வைத் துக் கூறிச் செய்யுள் செய்யும் முறைபோல இவரும் இங் வினம் தம்மைத் தம் செய்யுளால் கூறிக்கொண்டிருப் பின், இவர் பாணர் குலமென்பது எங்ஙனம் பொருங் தும்' எனின், இங்ங்னம் இவர் கூறியது ஓரிடம் சரிடத் தன்றிப்பல்லிடத்தும் கூறியுள்ளமையானும்,மேற்காட் டியபடி வேறு சான்றுகளும் பாணர் குலமென்பதற்குத் துணை செய்தலானும், இவரைத் தமிழ்ப் பெருவேந்தர் களாற் பெரிதும் பேணப்பட்டு வந்த பாணர் மரபின ரென்பதாற் படும் இழுக்கொன்றில்லையாகலானும், இவர் பாணர் மரபினரென்பதே பொருந்துவதாகு மென்க. இவராற் சுட்டப்பட்டுள்ள கள்ளுண்டல், ஊனுண்டல் முதலிய வழக்குகள் இவர் காலத்துப் பெரி துந்தீயவென ஒதுக்கப்பட்டவையல்லவெனினும்,அவை களேப் பேரருட்புலமை வாய்ந்த இவரது ஒழுக்கமெனக் கொள்ளற்க இவரது குலத்தவரின் ஒழுக்கமெனக் கொள்க,