பக்கம்:நல்லிசைப் புலவர்கள்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெருத்தலைச் சாத்தளுள் 鹦器

யுள்ளார். இப்பாட்டில், யானைகளைக் குழியில் வீழ்த் திப் பிடிப்பதும், யானைப் பேச்சுக்களால் அவற்றைப் பழக்குவதுமாகிய வழக்குகள் குறிக்கப்பட்டுள்ளன. 'வயல்களில் கவைத்த நெற்கதிர், வரம்பனையில் புடை பெயர்ந்து புரளும்படி வந்த வாடைக்காற்று, கரும் பின் கழைகளிலிருந்த குருகு என்னும் பறவைகள் கதற வீசும் நுண்ணிய பல துளிகளையுடைய பனி நாள்,' எனப் பணிக்காலத்தியல்பு புலப்படுத்தப்பட்டுளது. கடை கூர்த்துச் சிவந்த நெல்லின் தோகை, அழல் துதி போலிருக்கிறதென்று உவமங் கூறப்பெற்றுளது.

234-ஆம் பாட்டு முல்லைத்திணைக்குரிய துறையா கிய வினை முற்றிய தலைவன், கார் காலத் தொடக்கத்தில் தலைவி முல்லே கிலத்தில் தனது வரவு நோக்கி இருக்கும் இருப்பின் கிலே கூறிப் பாகனே விரைந்து தேர் கடாவச் சொல்லுந்துறையாய் அமைந்துள்ளது. இப்பாட்டில் குதிரை மூச்சு விடுவதற்குக் கொல்லனது துருத்திக் காற் றையும், குதிரையின் வாய்நூரைக்குப் பால்கடை நுரை யையும், அந்துரை வாயிலிருந்து தொங்குவதற்குச் சிலம்பி நூல் தொங்குவதையும், அந்துரை குதிரையின் மார்பில் செறிந்து காய்ந்திருப்பதற்குச் சந்தனம் பூசிக் காய்ந்த மார்பையும் உவமமாகக் கூறியுள்ளார். தலைவி பிரிவின் நலிவால் மெலிந்தமையின் கழலுகின்ற வளே யைக் கையால் செறித்து வருந்தும், எனத்தலைவியின் கிலேமை கூறப்பெற்றுள்ளது.

கற்றிணையில் இவர் பாடிய 383-ஆம் பாட்டு, பாலேத் திணைக்குரிய தலைமகள் ஆற்ருக் குறிப்பறிந்து, பிரிவிடைவிலக்கிய துறையாய் அமைந்துள்ளது. தலே மகன் பொருள்வயிற்பிரிதலே அறிந்த தக்லமகள் வருந்து தலும்,அதனை அறிந்த தலைமகன், பொருள் காரணமாக

3