பக்கம்:நல்லிசைப் புலவர்கள்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 நல்லிசைப் புலவர்கள்

இத்தகையாளை விட்டுப் பிரிவேனென்று என்னெஞ்சு கருதுமாயின், வறுமையின் இளிவு மிகக்கொடிது!" என வருந்திக் கூறுவதான் பொருள் இதிற்பொருந்தியுளது. இப்பாட்டில், தலைவியின் தன்மை கூறப்பட்டிருப்பது சுவை பயக்கும் தன்மையது. கருங்காக்கணம்பூ, வாடைக் காற்று வீசுதலால் கூத்தாடுகின்ற மயிலின் பீலி போல ஆடாகிற்கும், எனக் கூறப்பெற்றுளது. * கண்போல் மலர்' என்று எதிர்கிலே உவமம் வந்துளது. இவர் பாடிய அகப்பொருட்பாட்டுக்கள் மூன்றில் இரண்டு பாலேத் திணைக்குரியனவாகக் காணப்படுகின்ற மையின், இவர் அகத்திணையில் ஏனைத்தினேகளினும் பாலைத்திணையைப் புனேந்து பாடுதலில் வல்லுநர் என்று கருதலாகும். இவரது இயற்கை கலங்கனிந்த பாட்டுக் களின் அருமை பெருமைகள் அளத்தற்கரியன அறி ஞர் ஆய்ந்துணர்க. -

இவர் வாக்கில் பயின்றவை, ஆம்பல், கருவிளை, குவளை, முல்லை, அடுப்பு, துருத்தி, வாள், வில், சந்தனம், முத்தாரம், துாமடிச்சேக்கை, யானே, குதிரை, காய், குருகு, காரை, மயில், அரவு, தேர். வேள்வி, கடவுள், அணங்கு என்பவையும் பிறவுமாம்.