பக்கம்:நல்லிசைப் புலவர்கள்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2. உ ைற யூ ர் ஏணிச்சேரி முடமோசியார்

கல்விசைப் புலவர்கள் தொடுத்தணிந்த பரிபாடல்’ என்னும் அரிய கறுங்தொடையை அணிந்த பெருமிதத் தாற் பெருக்குற்றுப் பரிந்துசெல்லும் வையை என்னும் பொய்யாக் குலக்கொடி வளமுறப் படராகின்ற செக் தமிழ்ப் பாண்டிகாட்டின் தலைநகராகிய மதுரை மாங்க ரின் தென்கீழ்த்திசையில் விளங்குவது, ஆசில் புகழ்மிகு மோசி குடி என்னும் மூதுார். இது கல்விச் செல்வத் தாற்சிறந்து, மோசி கீாளுர், மோசி சாத்தளுர், மோசி கண்ணத்தனர் முதலிய கல்லிசைப் புலவர்கள் பிறந்த பெரும்பேற்ருல் தமிழகம் முழுவதும் சொல்லிசை வாய்ந்து திகழ்ந்தது. இச்சீரிய ஊரின்கண் இற்றைக்கு 1800 ஆண்டுகட்கு முன்னர், அந்தணர் குலத்திலே, முட மோசியாரென்னும் புலவர் தோன்றினர்.இவர் பிறக்கும் போழ்தே ஊழ்வினப்பயனல் முடத்தோடே பிறந்தா நாகலின், பின்னர்ச் சினேப்பெயரையும் ஊர்ப்பெயரை யும் புணர்த்தி, மூடமோசியார் என வழங்கப்பட்டார். இவர் உறுப்பில் முடவரேனும், அறிவில் முடம்படாது, கலை பல பயின்று, ஒப்பற்ற புலவர் திலகராய் விளங்கி னர். பெரும்பாலும் உலகில் ஒருவர்க்கு ஒருறுப்புக் குறைவு படின், அதன் ஆற்றலே ஏனைய பொறியில் மிகுத்து வைத்து, அக்குறையை நிரப்புவது இறைவ னது அருட்பெருஞ்செயல்களுள் ஒன்றென்பது கண் கூடன்ருே ?

இப்புலவர் பெருமான், தமது அளப்பரும்புலமைத் திறத்தால், தாம் பிறந்த நாடாகிய செந்தமிழ்ப் பாண்டிகாட்டிற்பெரும்புகழ் விளேத்து விளங்கியிருந்து,